உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவருக்கு முதல்ல தண்ணீர் கொடுங்க; மேடையில் பேச்சை நிறுத்தி விட்டு பிரதமர் செய்த செயல்

அவருக்கு முதல்ல தண்ணீர் கொடுங்க; மேடையில் பேச்சை நிறுத்தி விட்டு பிரதமர் செய்த செயல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது, கட்சி நிர்வாகி ஒருவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதை பார்த்து, பிரதமர் மோடி செய்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்துள்ளது.டில்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம்ஆத்மியை பா.ஜ., தோற்கடித்தது. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன், 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dey8txfu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வெற்றியை பா.ஜ.,வினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, டில்லியில் உள்ள பா.ஜ.,தேசிய தலைமை அலுவலகத்தில் வெற்றி விழா இன்று மாலை நடந்தது. அதில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்பட பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் டில்லி மக்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி, தொடர்ந்து உரையாற்றி வந்தார். அப்போது, அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகளில் ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது போல் காணப்பட்டார். உடனே பேச்சை நிறுத்திய பிரதமர் மோடி, அருகே இருந்தவர்களிடம், 'முதலில் அவருக்கு தண்ணீர் கொடுங்கள். தூங்குகிறீர்களா? அல்லது உடல்நலத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?' என்று கேட்டார். பிறகு, அங்கிருந்தவர்கள் தண்ணீர் கொடுத்த பிறகு, அந்த நபர் இயல்புநிலைக்கு வந்தார். அதன்பின்னர், பிரதமர் மோடி தொடர்ந்து பேசினார். இந்த நிகழ்வு அங்கிருந்த பா.ஜ.,வினரை நெகிழச் செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Dr Sundar
பிப் 10, 2025 05:06

எஸ் ஓவர் பின் மற் மோடி எ கிரேட் ஹியூமன் பேயிங் நல்ல மனிதர் வாழ்க வாழ்க


subramanian
பிப் 09, 2025 12:38

25 ஆண்டுகள் முதல்வர், 15 ஆண்டுகள் பிரதமர் இன்னும் மனிதத்தன்மை இருக்கிறது. இவர் நல்ல மனிதர். இவர் பாரத ரத்னம். உலகெங்கிலும் உள்ள பாரத மக்கள் சார்பாக மோடிக்கு வாழ்த்துக்கள்.


D.Ambujavalli
பிப் 09, 2025 06:01

பேச்சில் குறியாக இருந்தாலும், தன்னைச்சுற்றி நடப்பதிலும் கவனம் செலுத்தி, அவரது தேவையை உணர்வது என்பதுதான் மனிதம்


D.Ambujavalli
பிப் 09, 2025 06:01

பேச்சில் குறியாக இருந்தாலும், தன்னைச்சுற்றி நடப்பதிலும் கவனம் செலுத்தி, அவரது தேவையை உணர்வது என்பதுதான் மனிதம்


D.Ambujavalli
பிப் 09, 2025 06:02

பேச்சில் குறியாக இருந்தாலும், தன்னைச்சுற்றி நடப்பதிலும் கவனம் செலுத்தி, அவரது தேவையை உணர்வது என்பதுதான் மனிதம் மோடிஜி உண்மைத் தலைவர்


D.Ambujavalli
பிப் 09, 2025 06:01

பேச்சில் குறியாக இருந்தாலும், தன்னைச்சுற்றி நடப்பதிலும் கவனம் செலுத்தி, அவரது தேவையை உணர்வது என்பதுதான் மனிதம்.


J.V. Iyer
பிப் 09, 2025 04:32

இவரல்லவோ மக்கள் தலைவர்? வாழ்க மோடிஜி


Karthik
பிப் 09, 2025 02:40

இவர் தலைமை பண்புக்கு எடுத்துக்காட்டு


Mohammad ali
பிப் 08, 2025 23:53

இவர்தான் தலைவன்