உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ் குமார் பதவியேற்பு

தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ் குமார் பதவியேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவின் தலைமைத் தேர்தல் கமிஷனராக ஞானேஷ் குமார் பதவியேற்றார்.கடந்தாண்டு மார்ச் மாதத்தில் தேர்தல் கமிஷனர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அப்போது தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த ராஜிவ் குமார் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.இதைத் தொடர்ந்து, அடுத்த தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ் குமார் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று (பிப்.,19) இந்தியாவின் தலைமைத் தேர்தல் கமிஷனராக ஞானேஷ் குமார் பதவியேற்றார்.

யார் இந்த ஞானேஷ் குமார்?

* இவர் 1964ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி உத்தர பிரதேசத்தின் கான்பூரில் பிறந்தார். இவர் கான்பூர் ஐஐடியில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார்.* அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திலும் பட்டம் பெற்றார். கடந்த 1988ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.* கேரள பேட்ச் அதிகாரியான இவர் பல்வேறு மத்திய அரசு துறைகளில் பணியாற்றினார். மத்திய உள்துறையின் கூடுதல் செயலாளராக ஞானேஷ் குமார் பணியாற்றி உள்ளார்.* கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்கிறார்.* தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

SVR
பிப் 19, 2025 19:13

இன்றைக்கு உச்ச நீதி மன்றத்தில் நடக்க இருந்த வழக்கு 19-03-2025 க்கு விசாரணைக்கு எடுக்க பட இருக்கிறது என்று உச்ச நீதி மன்றம் கூறியிருக்கிறது.. இந்த இண்டி கூட்டணியின் கனா இன்னும் நனவாகவில்லை. ஆகவும் ஆகாது. பாராளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை, உச்ச நீதி மன்றம் உள்பட, எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது. அதை தான் பாராளுமன்றம் செய்திருக்கிறது. இது தெரிந்துதான் உச்ச நீதி மன்றமும் வழக்கு விசாரிப்பை ஒரு மாதம் தள்ளி வைத்திருக்கிறது. இந்த ஜோக்கர்கள் எல்லாம் எங்கே ஓடி ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள்? உதவாக்கரைகள்.


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 19, 2025 11:28

எசமான் , கும்பிட்டுக்குறேனுங்க . நீங்களாச்சும் இந்த வோட்டுப் பெட்டியில போட்ட ஒட்டு பத்து நாள் இருபது நாள் ரெண்டு மாசம்ன்னு குடியிருந்து குட்டி போடாம வோட்டு போட்டோமா மத்த நாளு எண்ணினோமான்னு சட்டு புட்டுன்னு முடிவை சொல்லிப் போடுங்கய்யா , உங்களுக்கு புண்ணியமாப்போவும்


Kasimani Baskaran
பிப் 19, 2025 11:21

எட்டுக்கோடி வாக்காளர்களை சட்டைப்பைக்குள் வைத்திருக்கும் தீம்க்காவின் அனுமதியில்லாமல் எப்படி ஞானேஷ் குமாரை பதவியில் அமர்த்தலாம். சந்துருவும் அந்தப்பதவியை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். இல்லை என்றால் தீம்க்கா பாஜகவுக்கு கொடுக்கும் ஆதரவு விலக்கிக்கொள்ளும்


Petchi Muthu
பிப் 19, 2025 11:02

வாழ்த்துக்கள்


Barakat Ali
பிப் 19, 2025 10:58

இவர் உள் துறையிலும், பொருளாதாரத் துறையிலும் அனுபவம் பெற்றிருப்பது சிறப்பு ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை