உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவாவில் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா

கோவாவில் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா

பனாஜி: கோவா மாநிலத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறைகளில் அமைச்சர்களாக பதவிவகித்து வந்த அலிமாவோ சகோதரர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிசெய்து வருகிறது.மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக சர்சில் அலிமாவோ, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக ஜோõவசிம் அலிமாவோ ஆகிய சகோதரர்கள் பதவி வகித்து வந்தனர். தற்போதுமாநிலத்தில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பிற்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியிடுவதற்கு அலிமாவோ சகோதரர்களின் மகள் வாலங்கா விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தலில் வாலங்காவுக்கு சீட் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனையடுத்து இரு சகேகாதரர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். கோவா மாநில சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 40. காங்கிரஸ்கட்சிக்கு 25 உறுப்பினர்களும் ,எதிர்கட்சியினர் 15 பேரும் உள்ளனர். இதன்மூலம்இவர்களின் ராஜினாமாவால் கட்சி க்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது கட்சியினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த2007-ல் நடைபெற்ற தேர்தலில் தனிக்கட்சி தொடங்கிய அலிமாவோ சகோதரர்கள் காங்கிரஸ் கட்சியில் முக்கியமான துறைகளை பெற்றுக்கொண்டு தங்கள் துவங்கிய கட்சியை காங்கிரசோடு இணைத்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ