உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நல்லவர் மனதில் தெய்வம் குடியிருக்கும்; சொந்த ஊருக்கு ரூ.100 கோடி நிதியுதவி கொடுத்த தொழிலதிபர்!

நல்லவர் மனதில் தெய்வம் குடியிருக்கும்; சொந்த ஊருக்கு ரூ.100 கோடி நிதியுதவி கொடுத்த தொழிலதிபர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி வழங்குவதற்காக, தொழிலதிபர் மகேந்திரா மேக் படேல் ரூ.100 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.குஜராத் மாநிலம் நிஸ்ரயா கிராமத்தில் பிறந்தவர் மகேந்திரா மேக் படேல். இவருக்கு வயது 86. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் அமெரிக்காவில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது சொந்த கிராமத்தில் அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என விரும்பி அதற்காக ரூ.100 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.நிஸ்ரயா கிராமத்தில்,அதிநவீன உயர்நிலைப் பள்ளியைக் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமின்றி, இந்த பள்ளியில் சிறந்த ஆசிரியர்கள் மற்றும் வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என மேக் படேல் விரும்புகிறார். தற்போது கன்சல்ட் ஆண்ட்ஸ் கார்ப்பரேஷனின் தலைவராக பணியாற்றி வரும் இவர் கூறுகையில், 'நான் இந்தியன் வங்கியில் 75 கோடி ரூபாய் பிக்சட் டெபாசிட் செய்து இருந்தேன். தற்போது அந்த பணத்தை நிஸ்ரயா கிராமத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளேன்' என்றார் மேலும், அவர் கூறுகையில், '​​நிஸ்ரயா கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி இல்லை. குழந்தைகள் மற்ற கிராமங்கள் அல்லது நகரங்களுக்குச் செல்ல வேண்டும். குழந்தைகள் அனைவரும் உயர்கல்வி பெற பள்ளி கட்டி கொடுப்பது எனது கனவு. மாணவர்கள் இலவசமாக கல்வி கற்க வேண்டும் என்றார். கடந்த ஆறு மாதங்களில் மட்டும், நிஸ்ரயா கிராமத்தை சேர்ந்த 70 ஏழை மாணவர்களுக்கு ரூ.30 லட்சம் வழங்கினார். அவர்களின் உயர்கல்வி பி.ஏ., பிகாம் மற்றும் பிசிஏ என பட்டப்படிப்புகளுக்கு மேக் படேல் உதவினார். தொடர்ந்து அவர் செய்த உதவிகளால், அந்த கிராமம் நல்ல வடிகால் அமைப்பு, சூரிய சக்தியால் இயங்கும் தெருவிளக்குகள், சி.சி.டி.வி., கேமராக்கள், ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகள் என வளர்ச்சி அடைந்துள்ளது. மேக் படேலுக்கு கிராம மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. இவரை அந்த கிராம மக்கள் கடவுள் போல் பார்க்கிறார்கள். உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் தன் சொந்த கிராமத்தை மறவாமல், ரூ.100 கோடி நிதியுதவி அளித்த மேக் படேலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

spr
நவ 09, 2024 19:58

பாராட்டுவோம் இதே போல தமிழகத்திலும் ஹெச் சி எல் நிறுவனத்தலைவர் செய்வதாகச் சொல்லப்படுகிறதே அறம் அறக்கட்டளை மற்றும் எச்.சி.எல் இணைந்து மாணவர்களின் மன வளத்தை அதிகப்படுத்தும் வகையிலான ஆன்லைன் கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.கோவை மாவட்டத்தில் 27 மாநகராட்சி பள்ளி, 23 அரசு பள்ளி என மொத்தம் 50 பள்ளிகளில் இத்திட்டத்தை கொண்டு சேர்க்க உள்ளதாகவும் இதன் மூலம் 56,572 மாணவர்கள் பலனடைவார்கள் என்றும் சொல்லப்பட்டதே


kulandai kannan
நவ 09, 2024 19:10

திருக்குவளைக்கு அல்வா!!


என்றும் இந்தியன்
நவ 09, 2024 18:38

தயவு செய்து பணத்தை யாருக்கும் கொடுக்காதீர்கள் திருப்பி வேண்டாமென்றால். அதற்குப்பதிலாக 1 மிக மிக குறைந்த விலை நல்ல உணவகம் ஆரம்பியுங்கள். 2 நல்ல பள்ளி, கல்லூரி குறைந்த டுய்ட்டின் 3 நல்ல தொழிற்சாலை ஆரம்பியுங்கள். மாதம் தவறாமல் நல்ல சம்பளம் கொடுத்து வேலைகொடுங்கள். அது தான் மிக சிறந்தது. அப்போது தான் உழைக்கவேண்டும் என்ற ஒரு புதிய எண்ணம், இலவச பிச்சையாக வாங்கும் இவர்கள் மனதில் தோன்றும். இலவசம் எல்லோரையும் நாசம் செய்கின்றது.


சமூக நல விருப்பி
நவ 09, 2024 17:08

எந்த காரணம் கொண்டும் பணத்தை அரசாங்கத்திடம் கொடுக்க கூடாது.


Oru Indiyan
நவ 09, 2024 15:24

சிங்கப்பூர் மலேசியா அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் நல்ல பதவியில் இருக்கும் பல தமிழர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு உதவி செய்யலாம்.. அரசியல்வாதிகள் துணையின்றி.


Barakat Ali
நவ 09, 2024 15:11

குஜராத்தை பிராடு என்று சொல்பவர்கள் பார்க்க வேண்டிய செய்தி ....


Anantharaman Srinivasan
நவ 09, 2024 15:02

ஊர் பணத்தை கொளையடிக்கும் கூட்டத்தின் நடுவில் ஆயிரத்தில் ஒருவர்.


krishnan
நவ 09, 2024 14:43

what has he done for the country that enriched him


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 09, 2024 14:33

குஜராத் காரர் தானா நிதி உதவி செய்வார். எங்கள் தமிழகத்திற்கும் நிதி கிடைக்கும். இந்த வெளிநாட்டு நிதி ஈர்க்க தனி சுற்று பயணம் ஏற்பாடு செய்யப்படும்.


Mettai* Tamil
நவ 09, 2024 12:51

ஆம் , நல்லவர் மனதில் தெய்வம் குடியிருக்கும்.....நன்றி அய்யா வாழ்த்துக்கள் ....


முக்கிய வீடியோ