மேலும் செய்திகள்
ஐயப்பனுக்கு தரமான சந்தனம்
11-Dec-2024
சபரிமலை:சபரிமலை ஐயப்பனின் உருவம் பொறித்த தங்க டாலர் விற்பனை செய்ய முடிவு செய்துள்ள திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதற்காக டெண்டர் கோரியுள்ளது.ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் சபரிமலையில் விற்கப்பட்டு வந்தது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் அது திடீரென்று நிறுத்தப்பட்டது. பக்தர்கள் அதிக அளவில் டாலர் கேட்டு வருவதை தொடர்ந்து மீண்டும் அதன் விற்பனையை தொடங்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.அதன்படி ஒரு கிராம், 2 கிராம், 4 கிராம், 6 கிராம், எட்டு கிராம் என ஐந்து வகையிலான டாலர்கள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேவசம்போர்டு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. முன்னணி தனியார் நகை நிறுவனங்கள் இந்த டாலரை தயாரித்து வழங்க முன்வந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.தங்கத்தின் தரம் உறுதி செய்யப்பட்டு 916 முத்திரையுடன் இது விற்கப்படும் என்றும் இதற்கான முடிவு தேவசம்போர்டு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் பி எஸ். பிரசாந்த் கூறினார்.
11-Dec-2024