உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 மாநிலங்களில் தங்க சுரங்கம்; புவியியல் ஆய்வகம் கண்டுபிடிப்பு

3 மாநிலங்களில் தங்க சுரங்கம்; புவியியல் ஆய்வகம் கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தங்கம் விலையால் அதிர்ச்சியில் உள்ளவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, நம் நாட்டில் மூன்று மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இதுபற்றி எஸ்.பி.ஐ., ஆராய்ச்சி அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒடிஷா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய தங்க சுரங்கம் ஏற்படுத்துவதற்கான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒடிஷாவின் தியோகார், கோஞ்சார், மயூர்பஞ்ச் ஆகிய மாவட்டங்களில், மொத்தம் 1,685 கிலோ கச்சா தங்கக்கட்டிகளை இந்திய புவியியல் ஆய்வமைப்பான ஜி.எஸ்.ஐ., கண்டறிந்துள்ளது.மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் கண்டறியப்பட்டுள்ள பகுதியில், லட்சக்கணக்கான டன் கச்சா தங்கக் கட்டிகள் கிடைக்கலாம் என்றும், ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தில் தனியார் இடத்தில், 750 கிலோ தங்கம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.தற்போது கண்டறியப்பட்டுள்ள தங்கத்தால், பெரும்பாலும் தங்கத்துக்கு இறக்குமதியை நம்பியுள்ள நம்நாட்டின் அன்னியச் செலாவணி அழுத்தம் குறையும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Thravisham
நவ 11, 2025 12:57

ஜான்டெலர் கம்பெனி கேஜிப் ல் தங்க சுரங்கம் ஆரம்பித்து ஆயிரக்கணக்கான டன் தங்கத்தை சுரண்டியெடுத்து/தொழிலாளிகளை வதைத்து பிரிட்டனுக்கு இந்தியாவுக்கு ஒரு நயா பைசாவும் கொடுக்காமல் எடுத்து சென்றுவிட்டனர். காந்தியோ இங்கு உப்புக்கு தண்ட யாத்திரை சென்று கொண்டிருந்தார். இது தான் அகிம்சா போராட்ட நாடகம்


Ramesh Trichy
நவ 11, 2025 10:48

நாம் நினைப்பதுபோல உடனே நடக்காது, 25 முதல் 30 ஆண்டுகள் ஆகலாம்


Anonymous
நவ 11, 2025 09:32

அப்படியே கோபாலபுரம் பக்கம் ஆராய்ச்சி செஞ்சு பாருங்க, அங்க எவ்ளோ பெரிய தங்க சுரங்கங்கள் இருக்குன்னு தெரிய வரும்.


duruvasar
நவ 11, 2025 09:29

தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது. இன்றைக்கு இந்த கார்டை போடலாம்.


chennai sivakumar
நவ 11, 2025 08:16

அலுமினியம் கண்டுபிடிக்கப்பட்ட போது விலை பயங்கர உச்சத்தில் இருந்தாம. பிறகு நடந்த கதை எல்லோருக்கும் தெரியும். தங்கமும் அது போல ஆகி விடலாம். எனவே வாசகர்கள் வெளியில் முதலீடு செய்யலாம். அதுவும் இப்போது ஏறுமுகத்தில் உள்ளதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கிறது


S.kausalya
நவ 11, 2025 08:11

தமிழகத்தில் இருந்தால் பீரோ கட்டில் எல்லாம் தங்கத்தில் செய்து குடும்பத்தினர் அனுபவிப்போம் .இப்பொழுது 7 தலை முறைக்கு தான் சொத்து தான் சேர்த்து இருக்கிறோம் . இங்கு தங்க சுரங்கம் இருந்தால் இன்னும் 50 தலைமுறைக்கு சொத்து சேர்ப்போமே.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
நவ 11, 2025 08:08

டுபாக்கூர்


V RAMASWAMY
நவ 11, 2025 08:08

இந்நேரம் அரசியல்வாதிகளுக்கு மூக்கு வியர்த்திருக்கும். ஆட்டை போட அவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அவர்களுத்தான் அகோர அசுர பசி எத்தனை ஆயிரம்,லக்ஷம் கோடிகள் சுரண்டினாலும் போதாது அவர்களுக்கு.


அப்பாவி
நவ 11, 2025 08:01

அடி ஆத்தி... அப்பிடியே சுத்தமான தங்கமாவே கொட்டிக் கிடக்குதே... சீக்கிரமே பழைய தங்கத்துக்கு பேரிச்சம்பழம்னு கூவப் போறாங்க.


Indhuindian
நவ 11, 2025 07:45

நல்ல செய்தி தமிழகத்தில் இல்லை என்பது பருத்தி புடவயா காய்ச்சமாதிரி இல்லேன்னா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை