உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரவுடி கோல்டி பிராரை பயங்கரவாதியாக அறிவித்தது மத்திய அரசு

ரவுடி கோல்டி பிராரை பயங்கரவாதியாக அறிவித்தது மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கோல்டி பிராரை பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.சில தினங்களுக்கு முன், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரும், பிரபல தாதாவுமான லக்பீர் சிங் லண்டாவை, பயங்கரவாதியாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது. பஞ்சாபை சேர்ந்தவர் லக்பீர் சிங் லண்டா, 33. தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடைய, சர்வதேச பாபர் கல்சா அமைப்பில் உள்ளார்.இந்நிலையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கோல்டி பிராரை பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர் சத்வீந்தர் சிங் மற்றும் சத்தீந்தர்ஜித் சிங் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோல்டி பிரார் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.தடை செய்யப்பட்ட இயக்கமான பாபர் கல்சா அமைப்புடன் கோல்டி பிரார் தொடர்பில் இருந்துள்ளார். பஞ்சாபில் பிரபலமான பாடகர் சித்து மூஸ்வாலா கொலை செய்யப்பட்டதற்கு மூளையாக கோல்டி பிரார் செயல்பட்டார் எனக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஜன 02, 2024 01:20

அறிவிப்பு போதாது. கண்ட இடத்தில் போட்டுத்தள்ள காவல் துறைக்கு அதிகாரம் கொடுக்கவேண்டும். கைது, காவல் நிலைய சிறை, வழக்கு, வாய்தா, என்று எதுவும் வேண்டாம்.


Rajagopal
ஜன 01, 2024 23:19

இனிமேல் இந்த ஆட்கள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். மர்ம நபர்களால் துரத்தப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.


Duruvesan
ஜன 01, 2024 21:56

அப்போ நாள் குறிச்சிடீங்களா?


வெகுளி
ஜன 01, 2024 18:41

இப்ப இவனை போராளி என்று தூக்கி பிடிக்க ஒரு கும்பல் ஓடி வரும்.... அதையும் கொத்தா தூக்கிடுங்க...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை