உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவில் ரூ.88 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள்

ஆந்திராவில் ரூ.88 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் தகவல் மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் கூகுள் நிறுவனம் ரூ.88 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: கூகுள் தகவல் மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நிதி சீர்திருத்தம் செய்யப்பட்ட பிறகு, இந்தத் திட்டங்களுக்காக விசாகப்பட்டினத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் ஒரேயடியாக 88 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. விசாகப்பட்டினத்தின் தார்லுவாடா, அடவிவரம் மற்றும் ராம்பில்லி ஆகிய இடங்களில் இந்த மையங்கள் அமைய உள்ளன. 2047 க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறிவிடும். அதில் முதன்மையான மாநிலமாக ஆந்திரா இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
அக் 10, 2025 22:00

ஈர்க்கவா சென்றார்? முதலீடு செய்யவல்லவா போனார் ?. பிச்சை போன்ற ஆரியரின் தயவு அவருக்குத் தேவையில்லை.


Easwar Kamal
அக் 10, 2025 21:27

உலகில் உள்ள தலை சிறந்த CEO சுந்தர் பிச்சை போன்றோரை அழைத்து மரியாதை செய்து அவர்களுக்கு என்ன வித உதவிகள் உண்டோ அதை எல்லாம் செய்தால் கண்டிப்பாக தமிழகம் பக்கம் வருவார். சுடலை மட்டும் அல்ல ஜெயாவும் இதில் அடங்குவர். இவர்களுக்கு எல்லாம் அவர்கள் வந்து இவர்களை பார்த்து இந்த கூட்டங்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தால் ஏதாவது செய்வார்கள். அது சரி இந்த சுடலை அமெரிக்கா போன பொது சுந்தர் பிச்சை எல்லாம் பார்த்த மாதிரி தெரிய வில்லையே. சைக்கிளில் நல்லா ஊரை சுற்றி பார்த்த படங்கள் தான் நிறைய கண்ணில் பட்டது. இவர்கள் எல்லாம் அந்த நாயுடுக்கு ஏதாவது மிச்ச மீதி பாலங்கள் இருந்தால் பெயரை வைத்து போஸ் கொடுக்க சொல்லுங்கள்.


Venkataraman
அக் 10, 2025 21:14

இந்த மாதிரியான பெரிய முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வர வாய்ப்பில்லை. இங்கு வரும் முதலீடுகள் கருணாநிதியின் குடும்பத்திற்காக கொண்டுவரப்படுகிறது.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
அக் 10, 2025 20:26

போப்பா நாயுடு, எங்க விடியல் சார் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்டு வந்து இருக்காரு,2026 ல எல்லோருக்கும் கவர்னமெண்ட் வேலை கொடுக்க போறாரு,


புதிய வீடியோ