உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணை ஜனாதிபதியை சந்தித்தார் கவர்னர் ரவி!

துணை ஜனாதிபதியை சந்தித்தார் கவர்னர் ரவி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் தன்கரை சந்தித்து பேசி உள்ளார்.தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காத நிலையில், அது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயித்தும், நிலுவையில் இருந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.கவர்னரால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும். காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில், துணை ஜனாதிபதி ஜெகதீஷ் தன்கர், 'ஜனாதிபதிக்கே சுப்ரீம்கோர்ட் உத்தரவிடுகிறது, நாட்டில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது' என்று கருத்து கூறி இருந்தார். இந்த கருத்து விமர்சனங்களை எழுப்பிய நிலையில், துணை ஜனாதிபதி ஜெகதீஷ் தன்கரை டில்லியில் கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு இன்று நிகழ்ந்து இருக்கிறது. சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. தன்கர் சந்திப்பை தொடர்ந்து, மத்திய சட்டத்துறை அதிகாரிகளுடன் கவர்னர் ரவி சந்தித்து ஆலோசனைகளை மேற்கொள்வார் என்று தெரிகிறது.மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க சுப்ரீம் கோர்ட் கெடு விதித்து இருந்த நிலையில் நிகழ்ந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. துணை ஜனாதிபதி தன்கர், மேற்கு வங்க மாநிலத்தில் கவர்னராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரு நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் அளித்த தீர்ப்பு குறித்து, கூடுதல் நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க கோரிக்கை வைப்பது அல்லது சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றி சட்ட வல்லுநர்களுடன் கவர்னர் ஆலோசிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

अप्पावी
ஏப் 20, 2025 07:27

சட்டம், மரபு தெரியாத ரெண்டு பேரும் என்ன பேசிப்பாங்க?


Dharmavaan
ஏப் 20, 2025 11:34

கூட்டத்தை விட மேலானவர்கள்


பல்லவி
ஏப் 19, 2025 23:28

அவுங்க எப்பவோ நுழைந்த மாதிரி இருக்கு


Sridhar
ஏப் 19, 2025 16:28

சட்டுபுட்டுனு எதுனாச்சும் பண்ணி அந்த தீர்ப்பை மாத்தியெழுத வழிவகை செய்யுங்கய்யா. திருட்டு கும்பல் யூனிவெர்சிட்டிக்குள்ள புகுந்து துட்டு அடிக்கறதோட மட்டுமில்லாம, பாடத்திட்டங்களையும் மாத்திருவானுங்க. இப்படித்தான் பள்ளிக்கூடங்கள்ல பாரதி பெயரையும் வாவுசி போன்ற சுதந்திர போராட்டவீரர்களையும் மறச்சிட்டு ராமசாமி போன்ற கீழ்த்தரமான ஆட்களை பற்றிய பொய்யான விவரங்களை மாணவர்கள் மத்தியில் பரவலாக்கி தமிழ் சமுதாயத்தையே பாழ் பண்ணி வச்சுருக்கானுங்க. பல்கலைக்கழக மாணவர்கள் மனசுலயும் நஞ்சு ஏர்றதுக்குள்ள போர்க்கால அடிப்படையில ஏதாச்சும் நடவடிக்கை எடுப்பீங்கன்னு பாத்தா, சும்மா ஆலோசனையே பண்ணிட்டுருக்கீங்களே?


Srinivasan Krishnamoorthy
ஏப் 19, 2025 18:13

well said. there are three options being discussed. ordinance route also to clarify governor and president s role and power to deal with legislations coming fro. state, in case they contravene central acts and authorities


Mariadoss E
ஏப் 19, 2025 16:01

ரெண்டு பேரையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாத்திடுங்க மை லார்ட்.


Mariadoss E
ஏப் 19, 2025 15:59

இரண்டு சட்ட மாமேதைகள் சந்தித்து சட்ட திருத்தம் செய்யப் போறாங்க


MP.K
ஏப் 19, 2025 15:45

கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாதவர்கள் தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த சட்டமன்றம் மசோதாக்களை எத்தனை ஆண்டுகள் தான் கிடப்பில் போடுவீங்க ? அதனால் தான் உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளது 142


Dharmavaan
ஏப் 19, 2025 20:56

எத்தனை வழக்குகளை அவர்கள் கிடப்பில் போடுகிறார்கள். இவர்களை திருத்த அவங்களுக்கு என்ன தகுதி


Dharmavaan
ஏப் 20, 2025 11:38

அருமைதெரியாத /சட்டம் தெரியாத கூட்டம்


பாமரன்
ஏப் 19, 2025 15:40

ஒருத்தர் தேவையில்லாம வாயை விட்டிருக்கிறார்... இன்னொருத்தர் தேவையில்லாமல் வாயை விட்டு ஃபைலை பெண்டிங் வச்சதுக்காக குட்டு வாங்கியவர்... என்ன பேசியிருப்பாங்க... பொதுவாக ரெண்டு வார்த்தை... பார்த்து பங்கு... அப்பிடின்னு ஒருத்தருக்கொருத்தர் சொல்லியிருந்திருக்கனும்...தெர்ல...


Dharmavaan
ஏப் 20, 2025 11:36

குட்டு வாங்க வேண்டிய /குட்டு வைக்க அருகதை இல்லாதவன்கள் முதலில் திருந்தட்டும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 19, 2025 15:10

சுயமாகச் சிந்திக்க வக்கற்ற நோய்பிடித்த வாடகை சிந்தனையுடைய கழகக் கொத்தடிமைகள் இங்கே கருத்துவாந்தி .....


venugopal s
ஏப் 19, 2025 14:46

உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என்று புலம்பி ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு இருப்பார்களோ ?


thehindu
ஏப் 19, 2025 14:21

இந்துமதவாத தீவிரவாதிகளின் கூட்டாளிகள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 19, 2025 15:08

உன்பெயருக்கும், கருத்துக்கும் பொருத்தமில்லையே ?? குல்லாஹ் நல்லாஹ் தெரியுது ..... மறைக்கவும் ....


Mettai* Tamil
ஏப் 19, 2025 15:52

தீவிரவாதிகளின் கூட்டாளிகளுக்கு, இந்துமதவாதம் பத்தாது ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை