மேலும் செய்திகள்
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
1 hour(s) ago | 4
விஜயபுரா : விஜயபுராவில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில், இரு பெண்கள் உயிரிழந்தனர்.சிந்தகி வழியாக விஜயபுரா நோக்கி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சும்; விஜயபுராவில் இருந்து சிந்தகிக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சும் சென்று கொண்டிருந்தன. இரு பஸ்களிலும் 50க்கும் மேற்பட்ட பயணியர் பயணித்தனர்.காவலகி கிராமம் அருகே நேற்று தேசிய நெடுஞ்சாலை 52 வழியாக வந்தபோது, இரண்டு பஸ்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.இதில், பசவனபாகேவாடியின் டோனுரா கிராமத்தைச் சேர்ந்த சஜீதா பேகம், 36, கலபுரகி நகரைச் சேர்ந்த ரோகினி, 31, ஆகியோர் உயிரிழந்தனர்.படுகாயடைந்த பயணியரை, அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலை 52ல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. 3 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கிரேன் மூலம் இரு பஸ்களும் அப்புறப்பட்டுத்தப்பட்ட பின், வாகன போக்குவரத்து சீரானது.
1 hour(s) ago | 4