உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 23,500 கோவில்களில் அறங்காவலர் குழு இல்லை; யாருமே விண்ணப்பிக்கவில்லை என்கிறது அரசு

23,500 கோவில்களில் அறங்காவலர் குழு இல்லை; யாருமே விண்ணப்பிக்கவில்லை என்கிறது அரசு

புதுடில்லி தமிழகத்தில் 23,500 கோவில்களில் அறங்காவலர் குழு இல்லை என்றும், அதற்கு யாருமே விண்ணப்பிக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழக கோவில்களை நிர்வகிக்க அறங்காவலர்கள் குழுவை அமைக்கக் கோரி, ஹிந்து தர்ம பரிஷத் என்ற அமைப்பு, 2021 நவம்பரில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. குழுவில் முன்னாள் நீதிபதி, சமூக ஆர்வலர், பக்தர், எஸ்.சி., அல்லது எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த ஒருவர், ஒரு பெண் ஆகியோர் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.ஏற்கனவே, ஹிந்து சமய மற்றும் அறக்கட்டளை சட்டத்தில் இது தொடர்பான பிரிவு உள்ளதாக தமிழக அரசு பதில் அனுப்பியது. இருந்தாலும், அந்த சட்டப் பிரிவை தமிழக அரசு செயல்படுத்தாமல் இருப்பதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தர்ம பரிஷத் வழக்கு தொடர்ந்தது. அங்கும் அதே பதிலை அரசு தெரிவித்தது. அதை ஏற்று, 2021 டிசம்பரில் பரிஷத் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். அதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தர்ம பரிஷத் மேல் முறையீடு செய்தது. ஹிந்து சமய மற்றும் அறநிலைய சட்டத்தை மேற்கோள் காட்டும் தமிழக அரசு, அதை செயலில் காட்ட மறுப்பதால், தமிழகத்தில் உள்ள, 40,000த்துக்கு மேற்பட்ட கோவில்களின் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை; பல கோவில்கள் சிதிலமாகி உள்ளன. ஆகவே, அனைத்து கோவில்களுக்கும் அறங்காவலர்கள் குழுவை உடனடியாக நியமிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் ஹிந்து தர்ம பரிஷத் கேட்டது. அறங்காவலர் குழுக்களை அமைக்க தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கனவே கால அவகாசம் கொடுத்திருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த் குமார் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழகம் முழுதும், 31,000 கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டன. ஆனால், போதிய விண்ணப்பங்கள் வராததால், 23,500 கோவில்களில் அறங்காவலர் குழுக்களை அமைக்க முடியவில்லை; இதுவரை 7,500 கோவில்களில் குழுக்கள் அமைக்கப்பட்டுஉள்ளன என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, மற்ற கோவில்களிலும் அறங்காவலர் குழுக்களை நியமிப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்பதை அறிக்கையாக நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை, பிப்ரவரி மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

N Sasikumar Yadhav
டிச 12, 2024 17:21

திருட்டு திராவிட மாடல் கட்சிக்காரனுங்க அவனுங்க ஆட்டய போட வசதியாக போடும் நிபந்தனைகளை பார்த்து அலறியடித்து ஓடுவார்கள் . முதலில் தமிழக கோயில்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் இந்துசமய துரோகத்துறையை அகற்றப்பட வேண்டும்


PARTHASARATHI J S
டிச 12, 2024 16:32

மிகவும் நல்லவர்கள் அடிப்படையில் சோம்பேறிகள். எந்த நல்ல காரியத்தையும் செய்ய முன்வர மாட்டார்கள். தீயசெயல்களை கண்டிக்கும் திராணி அற்றவர்கள். அதனாலேயே ஆயிரக்கணக்கில் சிலை திருட்டு நடந்துள்ளது. எல்லாம் பகவான் பார்த்துக்கொள்வான் என்ற மூடத்தனம்.


karthik
டிச 12, 2024 12:29

சாதாரண மக்கள் விரும்பாமல் இருப்பதற்கு காரணம் அந்த குழுவில் லோக்கல் கட்சி காரன் ஒருத்தனை போடுவார்கள்.. அவன் புடுங்கள் தாங்க முடியாது.. கோவில்களை முற்றிலும் அந்த அந்த ஊர் முன்பு இருந்தது போல ஊர் மக்களிடம் விட்டுவிட்டு அறநிலையத்துறை வெளியேறுவது தான் நல்லது.


A P
டிச 12, 2024 08:53

இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். கொஞ்சம் கூட இறைவனிடத்தில் பயமில்லாத, பக்தி இல்லாத, கட்சி சார்புடைய திருடர்களைத்தான் அறங்காவலர்களாக அனுமதிக்க இந்த அமைப்புகள் ஆசைப்படுகின்றன. இவங்களுக்கு எந்த நல்லவனும் வேண்டாம். வெளிப்படையாக அறங்காவலர் குழுத் தேர்வு நடக்க என்ன செய்தார்கள் இவர்கள். ரவுடிகள் கூட்டம்.. இவனை எல்லாம் குடும்பத்தோடு அழிக்க இறைவன் காத்திருக்கிறான். புத்தி வரட்டும் என்று சற்று காலம் தாழ்த்துகிறான் இறைவன் என்பது இதுகளுக்குப் புரியவில்லை.


Barakat Ali
டிச 12, 2024 08:32

கோவில் பெருச்சாளி ...அஞ்சாது என்று தமிழில் பழமொழியே உண்டு .....


Varadarajan Nagarajan
டிச 12, 2024 08:21

அறங்காவலர்கள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என நீதிமன்றங்கள் பலமுறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதை பின்பற்றித்தான் நியமங்கள் செய்யப்படுகிறதா? நிச்சயமாக இல்லை. ஆளும்கட்சிக்காரர்களை கொண்டு மாவட்ட கமிட்டி என ஒன்றை வைத்துக்கொண்டு, தனது கட்சிக்காரர்களை அறங்காவலர்களாக நியமிக்கின்றார்கள். நியமனம் வெளிப்படையாகவோ வழிகாட்டுதலின்படியோ நடக்கவில்லை


KRISHNAN R
டிச 12, 2024 08:03

விளம்பரம் வெற்று ஏமாற்று வேலை. ஆன்லைன் என்ற அடிப்படையில் ஏமாற்று. நல்லவர் உள்ளே வர விடமாட்டார்கள். திருட முடியாத இடத்தில்.. ஆட்கள் இல்லை.


subramanian
டிச 12, 2024 07:44

திமுக ரௌவுடிகள் கொள்ளை கூட்டம் செய்யும் தில்லுமுல்லு


Dharmavaan
டிச 12, 2024 07:21

இதற்கு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா செய்தித்தாள்களில் கோயிலில் ஒரு மூலையில் ஓட்டினேன் என்று சொல்லி அதையும் கிழித்துவிட்டால் அது விளம்பரம் ஆகாது ..அரசு சொல்வதற்கு ஆதாரம் என்ன அறங்காவலர்கள் தகுதி என்ன .அதுவும் இல்லாமல் கண்துடைப்பு வேலை செய்வது கோர்ட்டை/மக்களை ஏமாற்றும் வேலை


N Annamalai
டிச 12, 2024 06:23

மீண்டும் அந்த அறிவிப்பை வெளியிட உத்தரவு போடலாம் .


புதிய வீடியோ