உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லஞ்சம் கொடுத்தால் தான் அரசு அலுவலகங்களில் வேலை நடக்கிறது: கட்கரி

லஞ்சம் கொடுத்தால் தான் அரசு அலுவலகங்களில் வேலை நடக்கிறது: கட்கரி

புனே : '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது. ஆவணங்கள் வேகமாக நகர்கின்றன ,'' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புனே பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: லஞ்சம் கொடுத்தால் அதிகாரிகள் வேகமாக பணியாற்றுகின்றனர். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. நமது அமைப்பில் ஏராளமான விஞ்ஞானி நியூட்டனின் தந்தையர்கள் உள்ளனர். ஆவணங்கள் மேல் எடை( லஞ்சம்) வைத்தால் அது வேகமாக நகரும். நமது நாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் முடிவு எடுக்கும் முறை கொண்டு வர வேண்டும். தற்போது நடப்பதில் இருந்து இளைஞர்கள் பாடம் கற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Saleem
செப் 17, 2024 11:37

மத்திய அரசு தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது


SenthilKumar S
செப் 17, 2024 10:17

லட்சம் கொடுத்து வாங்கக்கூடிய சான்றிதழ்கள் செல்லாக் காசு என்று உதாசீனப்படுத்த வேண்டும். இருப்பிட சான்று, ஜாதி சான்று, போன்றவற்றை பள்ளி முதலான நிறுவனங்களின் சான்றுகளை ஏற்றுக் கொண்டால் அரசு அலுவலகங்களில் தொங்க வேண்டியதில்லை. கோபுர முத்திரையுடன் கையெழுத்து வேண்டும் என்பதால் கையெழுத்துக்கும் கோபுர முத்திரை ரப்பர் ஸ்டாம்ப் க்கும் தனித்தனியே கூலி கேட்கிறார்கள். தேவையற்ற சான்றிதழ்கள் தேவையில்லை என்ற நிலை வேண்டும்.


Lion Drsekar
செப் 17, 2024 07:42

இந்த கருத்தை சொல்வதற்கு இவர்கள் போன்றோருக்கு ஒரு பதவி , தடுத்து நிறுத்தத்தான் இவர்களை மக்கள் தேர்ந்தேடுத்து நல்லது செய்வார்கள் என்று அனுப்பினால் , இவர்களும் நம்முடன் சேர்ந்து கொண்டு அதே பாட்டை பாடுகிறார்கள், இதற்க்கெல்லாம் காரணம் மக்கள் எங்கு ஒற்றுமையாக சேர்ந்துவிடுவார்களோ, வாழ்ந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் எல்லா நிலைகளிலும் வெறுப்பு, வெறியைத் தூண்டி தூண்டி கலாச்சாரம், ஒற்றுமுமையை வேரோடு அழித்துவிட்டார்கள், வாழ்த்துக்கள், வந்தே மாதரம்


Mani . V
செப் 17, 2024 07:27

இதை பெருமையாகத்தானே சொல்லுறீங்க பாஸ்?


M.Srinivasan
செப் 17, 2024 06:46

சட்டம் இயற்றும் அதிகாரம் உங்களிடம் தானே இருக்கிறது. மிக கடுமையான சட்டங்களை கொண்டு வாருங்கள். குறைந்த பட்சம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் குடும்ப சொத்துகள் அனைத்தையும் உடனடியாக நாட்டுடைமை ஆக்குங்கள். வேண்டுமானால் நீதிமன்றம் சென்று உத்திரவு பெற்று அச்சொத்துக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.இம்மாதிரியான விஷயங்களில் வடகொரிய குண்டன் தான் சரியான வழி காட்டி..


Kasimani Baskaran
செப் 17, 2024 05:11

பொது மக்கள் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுக்க முன்வரும் பொழுது அதிகாரிகள் என்றுமே இராஜாக்கள்தான். வெளிப்படைத்தன்மை மற்றும் தவறு செய்பவர்கள் மீதான புகார் மீதான உறுதியான நடவடிக்கை போன்றவை லஞ்சத்தை குறைத்து உற்பத்தித்திறனை மேம்படுத்தும். அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் சொத்து விபரங்களை அரசு வெகு நேர்த்தியாக கண்காணித்து தவறுகள் தென்பட்டால் உடனே தக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.


Mohanakrishnan
செப் 16, 2024 22:51

இது திருட்டு மாடலுக்கும் பொஃருந்தும் இது புரியாத தெரியாத பண்ணாடை பன்றிகள் ஒளிபரப்புகின்றன


Dravidamani
செப் 16, 2024 21:14

கட்கரி சொல்வது பொய். லஞ்சம் ஊழல் என்றால் என்னவென்றே தெரியாத அரசு அலுவலர்களைக் குறை சொல்வதை ஏற்க முடியாது. கறை படியாத கரங்களில் ஆணி அடிப்பது சரியா?


Iyer
செப் 16, 2024 19:37

ஊழல் முழுவதும் ஒழியாததற்கு நமது நீதி மன்றங்கள் தான் காரணம். கெஜ்ரிவால் 100 கோடி லஞ்சம் பெற்றதற்கு ஆதாரம் உள்ளது என்பதை உச்ச கோர்ட் ஒப்புக்கொண்டுள்ளது. கெஜ்ரிவால் சிபிஐ, ஈ டி விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதையும் உச்ச கோர்ட் அறியும். கெஜ்ரிவால் தனது ஐ போனை சிபிஐ க்கு கொடுக்க மறுக்கிறார் என்பதையும் சுப்ரீம் கோர்ட் அறியும். அப்படி இருந்தும் உச்ச கோர்ட் கெஜ்ரிவாலுக்கு ஏன் ஜாமீன் கொடுத்தது? இதனால் தான் ஊழல் பேர்வழிகள் தைர்யமாக கொள்ளை அடிக்கிறார்கள்


குமரன்
செப் 16, 2024 19:36

பல பொறுப்பற்ற அதிகாரிகளால் சில பொறுப்பான அதிகாரிகளின் திறன் வீணாகிறது மேலும் பொறுப்பற்ற வர்கள் பார்க்கும் வேலைக்கு இரு எஜமானர்களிடத்தில் சம்பளம் பெறுகின்றனர் அந்த பாவம் அவர்கள் பிள்ளைகளிடமே செல்கிறது என்பதை உணர வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை