உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகரிக்கும் மருத்துவ செலவு: கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய திட்டம்

அதிகரிக்கும் மருத்துவ செலவு: கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டில் அதிகரித்து வரும் மருத்துவச் செலவை குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு மருத்துவ செலவு 13 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், இது சர்வதேச அளவில் 10 சதவீதமாக உள்ளது.மத்திய அரசும், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) நடத்திய ஆய்வில், சிகிச்சை அளிப்பதற்கான செலவை மருத்துவமனைகள் அதிகரிப்பதுடன், அதிக காப்பீடு எடுத்த பாலிசிதாரர்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால்,காப்பீட்டு நிறுவனங்கள் அதிக காப்பீட்டு தொகையை வசூலிக்க தூண்டியுள்ளதும் தெரியவந்துள்ளது.இதனையடுத்து செலவை குறைக்க வேண்டும் என்பதற்காக, மருத்துவ காப்பீட்டு சிகிச்சைக்கான பணம் கோரும் இணையதளத்தை மத்திய நிதித்துறை மற்றும் ஐஆர்டிஏஐ அமைப்பின் கீழ் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

SVR
ஜூலை 11, 2025 10:18

எனது சொந்த அனுபவம். அல்லோபதி மருத்துவர்கள் தேவையில்லாமல் சோதனைகளை பரிந்துரைக்கிறார்கள். எப்படி? தங்களுடைய மருத்துவமனையில் தான் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சோதனை மெஷின்கள் உள்ளது. இது மிக துல்லியமாக உடம்பில் உள்ள தொந்தரவை கண்டுபிடித்துவிடும் என்று கூறி ஒன்றுக்கு இரண்டாக பணத்தை பிடுங்குகிறார்கள். அவர்களே மிக அதிக விலையுள்ள ஊசி மருந்துகளை எடுத்த கொள்ள சொல்கிறார்கள். இதை நான் மட்டும் சொல்லவில்லை. எனது பால்ய அலோபதி மருத்துவ நண்பரே சொன்னார். பரிசோதனை பண்ண எழுதிக் கொடுத்த மருத்துவருக்கு 50 % பணம் சென்றுவிடும் என்று. அப்புறம் எப்படி பாரதத்தின் மருத்துவ செலவு அதிகரிக்காமல் இருக்கும். மத்திய அரசு நல்லதை நினைத்து திட்டம் கொண்டு வருகிறது. அதில் இருந்து எப்படியெல்லாம் பணம் பண்ணலாம் என்று பார்க்கிறார்களே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. இப்படித்தான் மக்கள் முன்பு இல்லாமல் இருந்தது இல்லை.


அப்பாவி
ஜூலை 11, 2025 10:09

மலுவு விலை மக்கள் மருந்தகத்திலேயே மருந்து விலைகளை ஏத்திட்டாங்க.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 10, 2025 23:20

இன்சூரன்ஸ் கம்பெனிகள் 100% வெளிநாட்டு முதலீடு இருக்கலாம்ன்னு சட்டத்தை மாற்றிய மந்திரி நிம்மியிடம் இதை பற்றி கேட்கலாம். இன்சூரன்ஸ் கம்பெனிகளின் லாபம், மருந்து கம்பெனிகளின் லாபம், கார்ப்பரேட் மருத்துவமனைகளின் லாபம் எத்தனை லட்சம் கோடி, அதை தான் மக்கள் மருத்துவ செலவாக முதுகொடிய சுமக்கிறார்கள், அதில் உங்கள் கட்சிக்கு கிடைத்த கமிஷன் எத்தனை லட்சம் கோடிகள் என்று.


theruvasagan
ஜூலை 10, 2025 22:04

காப்பீடு பிரிமியம் மீது..அநியாயமாக 18 சதவிகித ஜிஎஸ்டி வசூல் செய்வதே மத்திய அரசுதான். அதை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிக்கப்படும் என்று அறிவித்து 6 மாதங்கள் ஓடி விட்டன. இது வரை எந்த குறைப்பும் நடைமுறைக்கு வரவில்லை. பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வராமல் இதோ அதோ என்று சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு வருவதைப் போலத்தான் இதுவும்.


visu
ஜூலை 10, 2025 23:08

பெட்ரோலிய பொருட்களை GST க்குள் கொண்டுவர மத்திய அரசு சம்மதித்து விட்டது மாநில அரசுகள்தான் மறுக்கின்றன இது தெரியாமல் சொல்லுகிறீர்கள்


ஆரூர் ரங்
ஜூலை 11, 2025 11:13

பிரீமியம் மீது 18 சதவீதம் சேவை வரி விதித்து சோனியா பசி அரசு. அதுதான் இப்போது ஜிஎஸ்டி ஆகியுள்ளது. அதனைக் குறைக்க மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெற கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் தன்னிச்சையாக மாற்ற முடியாது.


Iyer
ஜூலை 10, 2025 19:59

 அல்லோபதியை முழுவதும் ஒழித்து - ஆயுர்வேதம் & இயற்கை வைத்தியம் இரண்டையும் ஊக்குவித்தால்தான் மருத்துவ செலவு குறையும்  உண்மையாக வியாதியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்


ஆரூர் ரங்
ஜூலை 10, 2025 21:40

நாட்டு மருத்துவம், ஆயுர்வேத சிகிச்சை நல்ல பலன் அளித்தால் மக்கள் அன்னிய மருத்துவத்தை நாடியது ஏன்?. 140 கோடி மக்களுக்கு இலை தழை வைத்தியம் சாத்தியமல்ல. காடுகள் அழியும். மற்ற பயிர்களுக்கு உரம், பூச்சிமருந்து பயன்பாட்டால் மூலிகைகளின் சத்துக்கள் மாறிவிட்டன எனத் தோன்றுகிறது.


Vel1954 Palani
ஜூலை 10, 2025 19:52

Cenrtal govt must take action, issue guidelines to private hospital not to ge exorbitant money from the people and payment must be made only on online only..


RAMESH KUMAR R V
ஜூலை 10, 2025 18:52

நல்ல முடிவு


SANKAR
ஜூலை 10, 2025 18:31

First let Centre remove 18% gst on health insurance found NOW HERE in the World.Next for all hospital charges reduce it to 5%


புதிய வீடியோ