உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  கவர்னர் - தமிழக அரசு பிரச்னைக்கு தீர்வு காண்போம் !: ஒரு வாரம் அவகாசம் அளித்தது சுப்ரீம் கோர்ட்

 கவர்னர் - தமிழக அரசு பிரச்னைக்கு தீர்வு காண்போம் !: ஒரு வாரம் அவகாசம் அளித்தது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: தமிழக கவர்னர், மாநில அரசுக்கு இடையே மோதல் போக்கு இன்னும் நீடித்து வருகிறதா? என, கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'துணைவேந்தர், மசோதா போன்ற விவகாரங்களில் ஒரு வாரத்துக்குள் இருதரப்பும் தீர்வு காண வேண்டும்; இல்லையெனில் நாங்களே இதற்கு தீர்வு காண்போம்' என, அறிவித்தனர். தமிழக கவர்னர் ரவிக்கும், தமிழக அரசுக்குமான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் கிடப்பில் போடுகிறார் என்ற குற்றச்சாட்டை தமிழக அரசு முன்வைத்து வருகிறது. தொடர்ந்து, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளது. பல்கலை துணைவேந்தர்கள் நியமன விவகாரம், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது போன்ற பல்வேறு விஷயங்களுக்காக, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கவர்னருக்கு எதிரான ரிட் மனுக்கள், 2023ல் தாக்கல் செய்யப்பட்டன.

பிரமாண பத்திரம்

இந்த வழக்குகள் தொடர்ந்து நிலுவையில் இருந்து வரும் நிலையில், நேற்றைய தினம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, ''தமிழக கவர்னர் ரவி தொடர்பான வழக்கு விவகாரத்தில் தற்போதைய நிலைமையை கேட்டறிந்து, அதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டி இருக்கிறது. ''எனவே இந்த வழக்கின் விசாரணையை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்,'' என, கோரிக்கை வைத்தார்.ஏற்கனவே, இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்து வருவதால் ஒத்திவைப்பு கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என, தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், வில்சன், அபிஷேக் மனு சிங்வி மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் சபரீஷ் ஆகியோர், 'தமிழக கவர்னரின் நடவடிக்கைகள் அரசு செயல்பாடுகளில் ஏற்கனவே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்' என்று வாதங்களை முன்வைத்தனர்.

அரசு ஒப்புதல்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'தமிழக கவர்னர் விவகாரத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளதா அல்லது பழைய நிலையை தொடருகிறதா?' என, கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள், 'மோதல் போக்கு இதுவரை முடிவுக்கு வரவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில், கவர்னர் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.'முக்கிய மசோதாக்களுக்கு கூட, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடியே கவர்னரிடமிருந்து தமிழக அரசு ஒப்புதல் பெற்று வருகிறது. 'பல முக்கிய பல்கலைகளின் துணைவேந்தர்கள் பதவிக்காலம் நிறைவடைந்து விட்ட நிலையில், அதை நிரப்புவதற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் கவர்னர் முட்டுக்கட்டை போடுகிறார்; இது தொடர்பாக நேற்று முன்தினம் புதிய இடையீட்டு மனுவும் தாக்கல் செய்துள்ளோம்' என, தெரிவித்தனர்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'இந்த வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கிறோம். அதற்குள், இருதரப்பும் இந்த விவகாரத்தில் ஒரு தீர்வை காணவில்லை என்றால், வழக்கை நாங்களே விசாரித்து இறுதியாக தீர்த்து வைப்போம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

subramanian
ஜன 19, 2025 12:59

உச்ச நீதிமன்றமும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் எதற்க்காக சக்திவாய்ந்த வழக்கறிஞர்களை கண்டு பயப்படுகிறார்கள்? சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்பட தயங்குகிறார்கள் ? நேரு போல மோடி ஒன்றும் மிரட்டவில்லையே ? . மனசாட்சிப்படி , சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி தீர்ப்பு சொல்லி இருந்தால் இந்த தீய திமுக எப்போதோ ஆட்சியை இழந்து இருக்கும்


Anantharaman Srinivasan
ஜன 18, 2025 23:23

இதுதான் இலைமறைவு காய் மறைவாக கவர்னரை ஆட்டிவைக்கும் சூத்திரதாரியை குட்டுவது.


SRITHAR MADHAVAN
ஜன 18, 2025 16:24

மாண்புமிகு பிரதமர் அவர்களே, திரு அண்ணாமலையை தமிழகத்தின் வருங்கால ஆளுநராக நியமிக்கலாம்.


பாமரன்
ஜன 18, 2025 19:53

எவ்ளோ அறிவு இந்த மாதவனுக்கு... பகோடாவா தான் இருக்கோணும்


venugopal s
ஜன 18, 2025 11:37

உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு மட்டும் குட்டு வைத்தால் போதாது, அவரைப் பின்னால் இருந்து ஆட்டுவிக்கும் மத்திய பாஜக அரசுக்கும் சேர்த்து நன்றாக உறைக்கும் படி குட்ட வேண்டும்!


subramanian
ஜன 19, 2025 12:54

வேணுகோபால் என்ற பெயரில் மறைந்துகொண்டுள்ள இழிபிறவியே , நீ சாப்பாடுதான் சாப்பிடுகிறாயா? இல்லை வேறு ஏதேனும் சாப்பிடுகிறாயா? நீ இந்த நாட்டில் மக்களில் பதர் . நீ போய் பாகிஸ்தானில் சாக வேண்டும்.


GMM
ஜன 18, 2025 11:15

தமிழக சட்ட சபையில் சட்டத்திற்கு உட்பட்டு மட்டும் தான் நீட்சி மசோதா தாக்கல் செய்ய முடியும். புதிய மசோதா நாடாளுமன்றம் மட்டும் தான் உருவாக்கும். மசோதா draft copy - ஒப்புதல் கவர்னர் அலுவலகம் தர வேண்டும். அதனை தான் சட்ட மன்றம் ஏற்க வேண்டும். தமிழக கவர்னர் பற்றி வழக்கு விவகாரமே சட்ட விரோதம். ஆளும் கட்சியில் எல்லை தலைமை செயலர் வரை மட்டும் தான் . கவர்னர், நீதிபதி, CAG - பற்றி எந்த புகாரும் கூற கூடாது. நீதிபதிகள், ஜனாதிபதி அவர்கள் தவிர அனைத்து அரசியல் சாசன முக்கிய பதவிகளை விசாரிக்க விரும்புகின்றனர். பிஜேபி நீதிமன்ற அணுகுமுறை நிர்வாக, சட்ட ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும்.


அப்பாவி
ஜன 18, 2025 10:37

ஒரு வாரம் கழிச்சு மீண்டும் வாய்தா வழங்கப்படும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 18, 2025 09:31

"என்னது ?? கவுனருக்கும், ஆட்சிக்கும் நடுவுல இன்னுமா பத்திக்கிட்டு எரியுது ?? " ......கேக்குறது யாரு ?? குற்றப்பின்னணி உடைய அமீச்சாருக்கு பதவிப்பிரமாணம் செஞ்சு வையி ன்னு ஆளுநரை புரட்டி எடுத்த உச்சமா கேக்குது ????


Velan Iyengaar
ஜன 18, 2025 09:28

உண்மையில் இது கெவுனருக்கு கிடைக்கும் கொட்டு இல்லை ... பின்னாலிருந்து ஆட்டிப்படைக்கும் கேடுகெட்ட உலகமாக பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் bj கட்சி கூட்டணிகளோடு ஆளும் மைனாரிட்டி ஒன்றிய அரசுக்கு கிடைக்கும் கொட்டு ....


Kasimani Baskaran
ஜன 18, 2025 07:39

சந்தேகத்துக்கு இடமில்லாத குற்றவாளியை மந்திரியாக தொடர உச்ச நீதிமன்றம் விட்டு வைத்து இருக்கிறது. ஆகவே இப்பேர்ப்பட்ட சட்டத்துக்கு உட்பட்டு நீதிமன்றத்தால் கவர்னரை கட்டுப்படுத்த முடியும் என்று நான் நம்பவில்லை. கவர்னரின் அதிகாரத்தில் நீதிமன்றமே தலையிட முடியாது என்று அரசியலமைப்புச்சட்டமே சொல்லும் பொழுது நீதிமன்றம் இப்படி உருட்டுவது தங்களது மரியாதையை குறைத்துக்கொள்வது போல தெரிகிறது. நீதித்துறையை சரி செய்யவில்லை என்றால் இந்தியா பின்னேறத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது.


பாமரன்
ஜன 18, 2025 10:26

காசியின் அழுவாச்சி அதிகமா இருக்கு... தக்காளி சட்னிக்கு பதில் ரத்தம் வந்திருக்குமோ...???


Sankar Ramu
ஜன 18, 2025 06:07

கவர்னர் யாருன்னே புரியாத திராவிடியா அரசுக்கு ஏத்த நீதிபதி. அவர் ஜனாதிபதியின் மேற்பார்வையாளர். வேண்டும்னா ஜாதிபதிக்கு சம்மன் அனுப்புங்கடா.


சமீபத்திய செய்தி