உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 20% எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களுக்கு பாதிப்பில்லை; தெளிவுபடுத்தியது மத்திய அரசு

20% எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களுக்கு பாதிப்பில்லை; தெளிவுபடுத்தியது மத்திய அரசு

புதுடில்லி: பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதால் கார்களில் மைலேஜ் குறைகிறது என்று சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது; எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாக, வாகன இன்ஜின் செயல்பாடு மேம்படும் என்கின்றனர், வாகன உற்பத்தியாளர்கள்.பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதால் கார்களில் மைலேஜ் குறைவாக கிடைப்பதாகவும், இன்ஜின்கள் மற்றும் பெட்ரோல் டேங்குகளில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், சமூகவலை தளங்களில் வதந்திகள் பரவின. இந்த தகவல்களை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wirqnabs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்பதை தெள்ளத்தெளிவாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதால் கார்களில் மைலேஜ் பாதிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கபடவில்லை. இதனால் எரிபொருள் செயல்திறனில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. E20 எரிபொருள் செயல்திறனை கடுமையாக குறைக்கிறது என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. E10க்கு வடிவமைக்கப்பட்டு E20க்கு மாற்றம் செய்யப்பட்ட வாகனங்களில் மைலேஜ் 1 முதல் 2 % மட்டுமே குறையக்கூடும், மற்ற வாகனங்களில் 3-6% வரை குறையக்கூடும். இன்ஜினில் சரியான மைலேஜ் டியூனிங் செய்தும், சிறந்த உபகரணங்கள் பயன்படுத்தியும் இதைத் தடுக்கலாம். இதனை ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இவ்வாறு மத்திய அரசு அறிக்கையில் கூறியுள்ளது. இ20 பெட்ரோல் காரணமாக, வாகன உதிரி பாகங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கிளம்பிய புரளிக்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, 'பழைய வாகனங்களில் ரப்பர் பாகங்கள், காஸ்கெட் போன்ற பாகங்கள், 20 ஆயிரம் கி.மீ.,க்கு பிறகு மாற்ற வேண்டியிருக்கும். அவற்றால் பெரிய செலவு இருக்காது. அவற்றை ரெகுலர் சர்வீஸ் செய்யும்போது மாற்றிக்கொண்டால் போதுமானது' என்று தெரிவித்துள்ளது. இதனால் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...!

* 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துங்கள், இதனால் ஏராளமான பயன்கள் உள்ளன. அதுமட்டுமின்றி மாசு பயன்பாட்டுகளை குறைக்கலாம். கரும்பு மற்றும் மக்காச்சோளத்தில் இருந்து தயார் செய்யப்படும் எத்தனால், முறையே 65 சதவீதம் மற்றும் 50 சதவீதம் குறைவான பசுமை இல்ல வாயுக்களையே வெளியிடுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.கடந்த 2014 - 15 முதல் எத்தனால் கலப்பு காரணமாக, நாட்டுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி மிச்சம் ஆகியுள்ளது. எத்தனால் உற்பத்திக்கு காரணமான விவசாயிகளுக்கு 1.2 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.அது மட்டுமின்றி, எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகன இன்ஜின் செயல்திறன், பயண அனுபவமும் மேம்படுகிறது என்று வாகன உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். பெட்ரோல் மற்றும் எத்தனால் 80:20 கலவையானது கார்பன் டை ஆக்சைடு CO2 உமிழ்வைக் குறைக்கிறது. பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக பிற நாடுகளை சார்ந்திருப்பதைக் குறைக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு அதிகரிக்கிறது. இதனால் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு மிகுந்த வரவேற்பு அளிக்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் விருப்பமாக இருக்கிறது.

உண்மைக்கு புறம்பானது!

மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கூறியதாவது: பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதன் மூலம் இந்தியா இதுவரை 700 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைத்துள்ளது. இதன் மூலம், பருவ நிலை மாற்ற இலக்குகளுக்கு பங்களித்துள்ளது. * பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் மத்திய அரசின் இணையதளங்களில் விரிவாக வெளியிடப்பட்டு உள்ளது. வாகன உற்பத்தியாளர்கள், எரிபொருள் விநியோகஸ்தர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் இடமும் விரிவான ஆலோசனை செய்யப்பட்ட பிறகே படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. * பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. * பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம், தொலைநோக்கு பார்வை கொண்டது; அறிவியல்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் நாட்டுக்கு பல விதங்களிலும் நன்மையை பெற்று தரும் நோக்கத்தில், சுற்றுச்சூழல் பொறுப்பு மிகுந்த நடவடிக்கை ஆகும். இவ்வாறு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
ஆக 05, 2025 17:52

அதான் பட்டப் பகலிலேயே பத்திட்டு எரியுதுங்க.


viki raman
ஆக 05, 2025 16:06

50% கலக்க வேண்டும்


கத்தரிக்காய் வியாபாரி
ஆக 05, 2025 14:31

இதன் மூலம் வரும் வருவாயில், டீசல் விலையை குறைத்து, லாரி தொழிலை மேம்படுத்த சாலையோரம் ஓட்டுனர்கள் இளைப்பாற பூங்காக்கள் அமைக்கவும்


Gokul Krishnan
ஆக 05, 2025 13:53

இந்த மத்திய அரசு சொன்ன கண்டிப்பாக உண்மையாக தான் இருக்கும் நம்பிட்டோம் பீகாரில்10 பாலம் வரை இடிந்து விழுந்தது பெரும்பாலான பாலங்கள் புதியது ஆனால் ஒரு விசாரணை இது வரையில் இல்லை ஏன் என்றால் கூட்டணி ஆட்சி அண்ணாமலை தி மு க மீது கொடுத்த ஊழல் பைலை ஆனது தேர்தல் சமயத்தில் 2ஜி ஊழல் குற்றச்சாட்டு மீண்டும் எழுப்பிய பிரதமர் அதன் பின்னர் அதை பற்றி ஒரு நடவடிக்கை வார்த்தை இல்லை விஜய் மல்லையா நீரவ் மோடி லலித் மோடி கொண்டு வரப்படுவார்கள் என்று சொன்னது என்ன ஆனது எடியூரப்பா மீது வழக்கு என்ன ஆனது இப்படி இந்த மத்திய அரசு வாய் சவாலை அடுக்கி கொண்டே போகலாம் எதற்கு எடுத்தாலும் ஜி எஸ் டி என்று சாதாரண மக்களை கசக்கி பிழிய மட்டும் தான் தெரியும்


vivek
ஆக 05, 2025 16:07

கோகுல ...நீங்க புதுசா வந்த கொத்தடிமை மெம்பர் ....அதான் தெளிவா தெளிவில்லாம பேசுற


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 05, 2025 13:48

எத்தனால் பெட்ரோல் எதுவும் இல்லாம உ பா வுல ஓடற மாதிரி வண்டிதான் எங்களுக்கு வேணும்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 05, 2025 13:16

20 சதவிகிதம் எத்தனால் கலப்பதால் கார்பன்டைஆக்சைடு உற்பத்தி குறைவு என்பது அனைவருக்குமான மறைமுக சுற்றுசூழல் லாபம். அந்நிய செலாவணி செலவு குறைவு என்பது தேசத்திற்கு லாபம். 20 சதவிகித எத்தனால் கலப்பதால் கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு லாபம். சந்தோஷம். ஆயில் நிறுவனங்களுக்கு எவ்வளவு லாபம்? அதில் எவ்வளவு சதவிகிதம் பயனாளர்களுக்கு பகிரப்பட்டுள்ளது? 20 சதவிகித எத்தனாலுக்கும் பயனாளர்கள் பெட்ரோலுக்கு கொடுக்கும் அதே பணம்தான் கொடுக்கிறார்கள். இதனால் பயனாளிகளுக்கு 1-2 சதவிகித மைலேஜ் குறைவு என்பது அவர்களுக்கு நஷ்டம். கூடவே அதை மாற்று, இதை மாற்று என்று கொஞ்சம் செலவும் வருகிறது. இதற்கு ஒரே தீர்வு பெட்ரோலிய பொருட்களின் விலையில் எத்தனால் கலப்பதால் ஏற்படும் லாபத்தின் ஒருபகுதி அளவிற்காவது குறைத்து அறிவிக்க வேண்டும். இது அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை