உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடந்த 5 ஆண்டுகளில் கைதான முதல்வர்கள், அமைச்சர்கள் பட்டியல்!

கடந்த 5 ஆண்டுகளில் கைதான முதல்வர்கள், அமைச்சர்கள் பட்டியல்!

புதுடில்லி: பிரதமரே ஆனாலும் கிரிமினல் குற்ற வழக்கில் கைதானால், தானாக பதவி பறிபோகும் வகையிலான புதிய மசோதா லோக்சபா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட அமைச்சர், முதல்வர்கள் குறித்து ஓர் சிறப்பு அலசல்.பிரதமரே ஆனாலும் கிரிமினல் குற்ற வழக்கில் கைதானால், தானாக பதவி பறிபோகும் வகையிலான புதிய மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6d2kvro9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால் ஊழல் வழக்கில் சிக்கிய சிறைவாசம் அனுபவித்த, அமைச்சர்கள், முதல்வர்கள் பதவி பறிபோகும் சூழல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விவரம் வெளியாகி உள்ளது.

அதன் விபரம் பின்வருமாறு:

மஹாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர், அனில் தேஷ்முக்இவர் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது அமைச்சராக பதவி வகித்தார்.ஊழல் வழக்கில் கடந்த நவம்பர் 1ம் தேதி 2021ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ஒரு வருடத்திற்கு பிறகு, இவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். டில்லி முன்னாள் அமைச்சர், சத்யேந்தர் ஜெயின் இவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர். சட்ட விரோத பண மோசடி வழக்கில், மே 30ம் தேதி 2022ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் இரண்டு வருடங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.முன்னாள் மேற்குவங்க அமைச்சர், பார்த்தா சாட்டர்ஜிஇவர் திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் ஜூலை 23ம் தேதி 2022ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மூன்று வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்தார்.டில்லி முன்னாள் துணை முதல்வர், மணிஷ் சிசோடியா இவர் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்தவர். டில்லி மதுபான ஊழல் முறைகேடு வழக்கில், பிப்ரவரி 26ம் தேதி, 2023ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தமிழக முன்னாள் அமைச்சர், செந்தில் பாலாஜிஇவர் திமுகவை சேர்ந்தவர். பண மோசடி வழக்கில், ஜூன் 14ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் இவர் 15 மாதங்கள் சிறையில் இருந்தார் பின்னர் விடுவிக்கப்பட்டார். டில்லி முன்னாள் முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் இவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர். டில்லி மதுபான ஊழல் முறைகேடு வழக்கில், மார்ச் 21ம் தேதி 2024 ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் 6 மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

பதவிக்கு ஆபத்து வருமா?

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்இவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்தவர். நில மோசடி வழக்கில் ஜனவரி 31ம் தேதி, 2024ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் ஐந்து மாதங்கள் சிறையில் இருந்தார்.புதிய சட்டத்தால் இப்படி கைதாகி சிறையில் இருப்பவர்கள் பதவி பறிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Yaro Oruvan
ஆக 22, 2025 13:46

நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதுன்னா அது நம்ம திராவிஷ கும்பலுக்கு புடிக்காது.. பாருங்க இனி கதறுவானுவ .. 200 உப்பி மீடியாக்கள் மூலமா கூப்பாடு போடுவானுவ.. என்ன கூவுனாலும் சட்டம் தன் கடமையை செய்யும் ஜைஹிந்


தமிழன்
ஆக 22, 2025 09:33

லஞ்சம் வாங்குவதும் லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்று ஒவ்வறு அரசாங்க அலுவலகத்திலும் எழுதி வைத்து இருக்கிறார்கள் ஆனால் அங்கே தான் லஞ்சத்தின் உச்சம் நடக்கிறது என்ன செய்வது சட்டம் நல்லதுக்காக இயற்றபடுகிறது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது


spr
ஆக 22, 2025 07:03

இது சிறப்பானதொரு சட்டமே என்பதனை திரு பாண்டே சொல்லும் விளக்கத்தைக் கேட்பவர்களுக்குப் புரியும் இதில் மாநில அரசின் காவற்துறை வழக்குப் பதிந்தால் மட்டுமே தான் மத்திய அரசின் அமுலாக்கத்துறை தொடங்கி, சி பி ஐ மற்றும் இதர துறைகள் விசாரணை செய்ய முடியும். இல்லையேல் எதுவுமில்லை. அப்படியிருக்கையில் மாநில முதல்வர்களை மீறி அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவற்துறை நடவடிக்கை எடுக்குமா? பிரதமரையே டெல்லி காவற்துறை கைது செய்தால் உடனடியாக அவர் ஜாமீன் பெற்றுவிடுவார் என்றாலும் அவரும் இச்சட்டத்தால் பாதிக்கப்படுவர் இது பொதுவாக காஷ்மீருக்கானது என்று புரிந்து கொண்டால் பிரச்சினைகள் இல்லை இதனை எதிர்ப்பவர்கள் நாட்டின் பொது நலனுக்கு கேடு விளைவிப்பவர்களே மத்திய அரசின் காவற்துறை நிர்வாகமுள்ள இடங்களில் குற்றம் செய்தவர்களுக்கு பாதிப்பு வரலாம். ஆனால் இந்த நாட்டின் சட்டங்களும் நீதித்துறையும் அவர்களைக் காப்பாற்றிவிடும் என்ன கபில்சிபில் போன்ற வழக்காடுபவர்களுக்கு ஆதாயம் அவ்வளவே எதுவானாலும் எந்த ஒரு மசோதாவும் விவாதிக்கப்படாமல் சட்டமானால் அது முறையல்ல என்பதனை எதிர்க்கட்சிகள் உணர்ந்து பாராளுமன்றம் சட்ட மன்றங்கள் முறையாக நடைபெற உதவும் நாளே நாடு விடுதலை பெற்ற நாள்


Natarajan Ramanathan
ஆக 22, 2025 06:44

முதலில் யாருமே இரண்டுமுறைக்குமேல் மந்திரியாக இருக்கவே கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும்.


Gopalan
ஆக 21, 2025 20:23

இந்த சட்டம் மிகவும் மோசமானது. 5 வருடங்களுக்கு மேல் சட்டத்தால் தண்டனை பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி இழக்க நேரிடும். எங்கும் ஊழல் நடக்கும் இந்த அரசியல் ராஜ்ஜியத்தில் இவர்கள் பிடிப்படுவது இல்லை. கண் துடைப்பு சட்டம்.


pakalavan
ஆக 21, 2025 18:06

குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு வந்தால், சிறையில் இருக்க காரணமானவர்களை தூக்கிலிடலாமா ? தீர்ப்பு வழங்கும் நீதிபதியை என்ன செய்யலாம்னு,


என்றும் இந்தியன்
ஆக 21, 2025 16:32

இந்த ட்டத்தில் சிறிய ஆறுதல் செய்யப்படவேண்டும் 1 சிறையில் 30 நாட்கள் இல்லையென்றாலும் இந்த குற்றம் செய்து ஜாமீனில் இருப்பவர்கள் கூட பிரதம மந்திரி முதல் மந்திரி மந்திரி எம் எல் ஏ எம் பி கவுன்சிலர் வரை பதவி இழக்கவேண்டும் 2 இந்த பதவி இழந்த யாரும் இன்னொரு முறை எந்த பதவி தேர்தலிலிலும் நிற்க அனுமதி இல்லை 3 இவர்கள் சொத்துக்கள் + இவர்கள் குடும்ப உறுப்பினர் சொத்துக்கள், இவர்கள் செய்த தொழிலிலினால் வந்த லாப நஷ்டம் பார்த்து அதிகப்படி இருக்கும் பட்சத்தில் அந்த அதைக்க பணம் / சொத்து அரசுக்கு மாற்றப்படவேண்டும்


MANIMARAN R
ஆக 21, 2025 14:29

சட்டத்தை உருவாக்கிவிட்டு அமலாக்க துறையை ஏவி விடுவார்கள் பிறகு அவர்களை பிடித்து ஜெயிலில் போடுவார்கள் பொடா சட்டத்தை போல .... இன்னும் தொடரும்


GMM
ஆக 21, 2025 14:29

கிரிமினல் வழக்கில் சிக்கிய அமைச்சர் 30 நாட்கள் சிறையில் இருந்தால், பதவி தானே செயல் இழந்து விடும். மத்திய அரசு ஒருவரை குற்றம் சாட்டி பதவி இழக்க செய்வது அவ்வளவு எளிதல்ல. இந்த மசோதா ஆரம்ப நிலை நீதிமன்ற தலையீட்டை நிறுத்திவிடும். நீதிமன்ற தலையீடு இல்லாமல் சட்டம் வகுக்க வேண்டும். தற்போதுள்ள பல சட்டங்கள் நீதிமன்றம் சென்று தீர்வு காணும் முறையில் வகுக்க பட்டு உள்ளது.


venugopal s
ஆக 21, 2025 13:31

இதில் யாராவது ஒருவராவது பாஜக ஆளும் மாநிலத்தை சேர்ந்தவர்களா? ஏற்கனவே உள்ள சட்டங்கள் எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசின் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படுகிறது. இந்த புதிய சட்டம் மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மீது மொத்த அதிகார துஷ்பிரயோகம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படும்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை