உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குதிரை மீது அமர்ந்தபடியே உயிரிழந்த மணமகன்

குதிரை மீது அமர்ந்தபடியே உயிரிழந்த மணமகன்

ஷியாபுர்: மத்திய பிரதேசத்தில், மாப்பிள்ளை அழைப்பின்போது, குதிரை மீது ஊர்வலமாக வந்த மணமகன், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷியாபுரைச் சேர்ந்தவர் பிரதீப் ஜாட், 26. ஷியாபுர் மாவட்ட மாணவர் காங்கிரசின் முன்னாள் தலைவரான இவருக்கு, அங்குள்ள மண்டபம் ஒன்றில் திருமணம் நடைபெற இருந்தது.இதன் ஒரு பகுதியாக, மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடைபெற்றது. மண்டபத்துக்கு அவரை குதிரையில் அமர வைத்து ஊர்வலமாக உறவினர்கள் அழைத்து வந்தனர். வாண வேடிக்கை, ஆட்டம் - பாட்டம் என களைகட்டிய ஊர்வலம், திருமண மண்டப வளாகத்தில் நுழைந்தபோது, குதிரை மீது அமர்ந்திருந்த பிரதீப் மயங்கி விழுந்தார். இதனால், ஆடல், பாடல் நிறுத்தப்பட்டது. பிரதீப்புக்கு உறவினர்களும், நண்பர்களும் முதலுதவி செய்தனர். எந்த பலனும் இல்லாததால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரதீப்பை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறியதால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். மணமகன் உயிரிழந்ததால், திருமண வீடு, துக்க வீடாக மாறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை