சொகுசு வீடுகள் மீது அதிகரிக்கும் ஆர்வம்
நாட்டின் முக்கிய எட்டு நகரங்களில், நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வீடுகள் விற்பனை சீரான நிலையில் உள்ளதாக ‘நைட் பிராங்க் இந்தியா’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் முக்கிய நகரங்களில் மொத்தம் 2.58 லட்சம் வீடுகள் விற்பனையானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் குறைந்த விலை வீடுகளை விட, அதிக விலை கொண்ட வீடுகளை வாங்கும் ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நிலவரம்: *நடப்பு ஆண்டில் சென்னையில் வீடுகள் விற்பனை 2 முதல் 4 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளது *நகரில் ஒரு சதுர அடி குடியிருப்பின் சராசரி விலை 6,560 ரூபாய் முதல் 8,560 ரூபாய் வரை நிலவுகிறது *சென்னை – பெங்களூரு மற்றும் விசாகப்பட்டினம் – சென்னை ஆகிய முக்கிய தொழில் வழித்தடங்கள் வாயிலாக நகரின் உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறை மேலும் வலுவடைந்து வருகிறது. முன்னணி 4 நகரங்கள் (விற்பனை எண்ணிக்கை):நகரம் விற்பனையான வீடுகள்மும்பை 72,804பெங்களூரு 43,140புனே 36,402டெல்லி என்.சி.ஆர்., 35,574 விலை வாரியாக விற்பனை பங்கு:ரூ.1 கோடிக்கு மேல்: 55%ரூ.1 கோடிக்கு கீழ்: 45% விற்பனை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம் (ஆண்டு ஒப்பீடு)விலை பிரிவு மாற்றம் (%)ரூ.2 கோடி – ரூ.5 கோடி + 19.40%ரூ.1 கோடி – ரூ.2 கோடி + 6.80%ரூ.50 லட்சத்திற்கு கீழ் – 14.00%