உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.,எப் 14 ராக்கெட்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.,எப் 14 ராக்கெட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீஹரிகோட்டா: ஜி.எஸ்.எல்.வி., எப்14 ராக்கெட்ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. செயற்கைக்கோள் புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், வானிலை நிலவரம், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிவது உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பயன்படக்கூடிய, 'இன்சாட் - 3டிஎஸ்' செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இதன் எடை, 2,274 கிலோ.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ew7lzleq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதை சுமந்து கொண்டு, ஜி.எஸ்.எல்.வி., எப்14 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (பிப்.,17) மாலை, 5:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இது, ஜி.எஸ்.எல்.வி., வகையில், 16வது ராக்கெட் ஆகும். தொடர்ந்து, புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.இதன் பிறகு பேசிய சோம்நாத், செயற்கைக்கோள் திட்டம் வெற்றி பெற்றது. அனைவருக்கும் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ديفيد رافائيل
பிப் 17, 2024 21:39

Super


veeramani
பிப் 17, 2024 18:40

மிக்க மகிழ்ச்சியான தருணம்.. இதில் கிரையோஜெனிக் ராக்கெட் என்ஜின் வடிவமைப்பில் என்பது முதல் பதினைந்து வரையிலும் உடன் வேலை பார்த்தேன். வெற்றிகரமாக என்ஜின் வடிவமைக்கப்பட்டு சோதனைகள் பல செய்யப்பட்டு ராக்கெட்டில் இணைக்கப்பட்டது. இதில் இ ஸ்ரோ சயின்டிஸ்ட்களை பாராட்டியாகவேண்டும்.


S.L.Narasimman
பிப் 17, 2024 18:29

வாழ்த்துக்கள்..


(null)
பிப் 17, 2024 18:01

Congratulations ISRO, Bharath Matha Ki Jai


Raj
பிப் 17, 2024 18:01

சபாஷ் ????.... இனி மழை வரும் காலங்களில் தமிழ்நாடு அரசாங்கம் குற்றம் கூற முடியாது. மழை வரும் நேரங்களில் வானிலை அறிக்கையை முன்கூட்டியே அறிவித்து விடுவார்கள்... இல்லையென்றால் விடியல் ஆட்சி வானிலை அறிக்கையை சரியாக கூறவில்லை, அதனால் தான் மழை நீர் ஊருக்குள் வந்தது என்று...


krishnan
பிப் 17, 2024 17:48

thank god and scientists.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி