உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.,எப் 14 ராக்கெட்

இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.,எப் 14 ராக்கெட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீஹரிகோட்டா: 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், வானிலை நிலவரம், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிவது உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பயன்படக்கூடிய, 'இன்சாட் - 3டிஎஸ்' செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இதன் எடை, 2,274 கிலோ.இதை சுமந்து கொண்டு, ஜி.எஸ்.எல்.வி., எப்14 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (பிப்.,17) மாலை, 5:30 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது, ஜி.எஸ்.எல்.வி., வகையில், 16வது ராக்கெட்.ஏவுதளத்தில் ராக்கெட் தயாராக உள்ள நிலையில், அதற்கான கவுண்டவுன் நேற்று துவங்கியது. இறுதிகட்ட பணிகளில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

A1Suresh
பிப் 17, 2024 13:25

சிக்ஸ்-ஜி வசதி வரும்காலத்தில் வாரத்திற்கு ஒரு ராக்கெட் ஏவவேண்டிய நிலை ஏற்படும் என்று சென்னை ஐஐடி தலைவர் கூறுகிறார். அப்பொழுது வெளினாட்டு தொலைதொடர்பு செயற்கை கோள்களையும் நமது ராக்கெட்டுகள் மூலம் ஏவுவதால் பல லட்சம் கோடி வருமானம் ஈட்ட முடியும். "விண்வெளி ஆராய்ச்சியால் என்ன பயன், நிலவிற்கு-செவ்வாய்க்கு செல்வதால் என்ன பயன் ? " என்று கேட்ட அதிமேதாவிகளுக்கு அன்று புரியும். மோடிஜி எதிர்கால திட்டங்கள் தீட்டுவதில், நடைமுறைப்படுத்துவதில் சாணக்கியர் என்று நிரூபிக்கிறார்


Kasimani Baskaran
பிப் 17, 2024 08:03

கிளம்பாக்கத்திலிருந்து விடும் பேருந்துகளை விட அதிக எண்ணிக்கையில் ராக்கெட் விட்டு சாதிக்கிறது இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம். விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை