உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி

புதுடில்லி: செப்டம்பர் மாதத்தில் ரூ.1.89 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், அக்டோபர் மாதத்தில் 4.6 சதவீதம் அதிகரித்து ரூ.1,95,936 கோடியாக உயர்ந்துள்ளது.ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று அதற்கு முந்தைய மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி தொகை குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (நவ.,01) கடந்த அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வசூல் குறித்து மத்திய நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: செப்டம்பர் மாதத்தில் ரூ.1.89 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், அக்டோபர் மாதத்தில் 4.6 சதவீதம் அதிகரித்து ரூ.1,95,936 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட 9 சதவீதம் அதிகம்.தொடர்ச்சியாக கடந்த 10 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் அமலானது. ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்துள்ளது. இதனால் மின்னணு சாதனங்கள் விற்பனை அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த மாதங்களின் ஜிஎஸ்டி வசூல்:* செப்டம்பர் மாதம்- ரூ.1.89 லட்சம் கோடி * ஆகஸ்ட் மாதம் -ரூ.1.86 லட்சம் கோடி* ஜூலை மாதம் - 1.96 லட்சம் கோடி* ஜூன் மாதம் - ரூ.1.84 லட்சம் கோடி* மே மாதம் - ரூ.2.01 லட்சம் கோடி* ஏப்ரல் மாதம் - ரூ.2.36 லட்சம் கோடி* மார்ச் மாதம் - ரூ.1.96 லட்சம் கோடி* பிப்., மாதம் - ரூ.1.84 லட்சம் கோடி* ஜன., மாதம் - ரூ.1.96 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

siva
நவ 01, 2025 16:52

இந்த ஜிஎஸ்டி வசூல் குறித்து எதிர்த்து வரும் திராவிட மாடல் காரர்கள் மத்திய அரசு பணத்தை வாங்கி கல்லா கட்டுகிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை