| ADDED : மார் 01, 2025 05:32 PM
புதுடில்லி: கடந்த பிப்ரவரி மாதம் ஜி.எஸ்.டி.,வசூல் 9.1 சதவீதம் அதிகரித்து 1.84 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1.68 லட்சம் கோடி வசூல் ஆகியிருந்தது.இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b5707mp1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிப்ரவரி மாதம் மத்திய ஜிஎஸ்டி 35,204 கோடி ரூபாயாகவும்மாநில ஜிஎஸ்டி 43,704 கோடி ரூபாயாகவும்ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 90,870 கோடி ரூபாயாகவும்கூடுதல் வரி 13,868 கோடி ரூபாயாகவும் வசூலாகி உள்ளன.மொத்தம், ரூ.1.84 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது. உள்நாட்டு வருமானம் மற்றும் இறக்குமதி மூலம் கிடைத்த வருமானம் அதிகரித்ததால், பிப்., மாத ஜி.எஸ்.டி.,வசூல் 10 சதவீதம் அதிகரித்து உள்ளது.கடந்த ஆண்டு பிப்., மாதம் ரூ.1.68 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது.