உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செறிவூட்டப்பட்ட அரிசி மீதான ஜிஎஸ்டி குறைப்பு: ஜீன் தெரபி சிகிச்சைக்கு வரிவிலக்கு

செறிவூட்டப்பட்ட அரிசி மீதான ஜிஎஸ்டி குறைப்பு: ஜீன் தெரபி சிகிச்சைக்கு வரிவிலக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: செறிவூட்டப்பட்ட அரிசி மீதான ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும், ஜீன் தெரபி சிகிச்சைக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடந்தது. மத்திய நிதி இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, பல்வேறு மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர். மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=epvx9k6e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இக்கூட்டத்திற்கு பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:*செறிவூட்டப்பட்ட அரிசி மீதான ஜி.எஸ்.டி. 12ல் இருந்து 5 சதவீதம் ஆக குறைக்கப்பட்டு உள்ளது.*ஜீன் தெரபி சிகிச்சைக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு*சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு*அரசு திட்டங்கள் மூலம் இலவசமாக தரப்படும் உணவுகளின் மூலப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது.*மிளகு மற்றும் உயர்ந்த திராட்சை ஆகியவற்றை விவசாயிகள் விற்பனை செய்தால் ஜி.எஸ்.டி. கிடையாது. வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்தால் ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.*சிறு நிறுவனங்கள் ஜி.எஸ்.டி., வரி துறையில் பதிவு செய்யும் நடைமுறையை எளிமையாக்க நடவடிக்கை*வங்கி கடன் பெற்றவர்கள் விதிமுறைகளை பூர்த்தி செய்வதன் மூலம் விதிக்கப்படும் அபராதத்தின் மீது எந்த ஜி.எஸ்.டி.,யும் இல்லை.*விமானங்களுக்கான எரிபொருள் ஜி.எஸ்.டி., வரி வரம்பிற்குள் வரவில்லை. விமான எரிபொருளை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வரும் பரிந்துரையை மாநிலங்கள் எதிர்த்தன.*புட் ஹோம் டெலிவரி சேவை மீது ஜி.எஸ்.டி., விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.* 50 சதவீதத்திற்கும் மேல் சாம்பல் உள்ள ஏசிசி பிளாக்குகளுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி.,*மருத்துவக் காப்பீடு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவிற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Saravanan
டிச 22, 2024 01:11

"விமானங்களுக்கான எரிபொருள் ஜி.எஸ்.டி., வரி வரம்பிற்குள் வரவில்லை. விமான எரிபொருளை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வரும் பரிந்துரையை மாநிலங்கள் எதிர்த்தன" அப்போ மத்திய அரசு எந்த முடிவும் தனியா எடுக்கல - மாநிலத்தை ஆளும் லகடபாண்டிகள் தான் முடிவு செய்கின்றனர்


Saravanan
டிச 22, 2024 01:08

நிர்மலா அம்மா அடுத்த முறை கூட்டத்துல பெட்ரோல் டீசல் GST யில் சேர்க்கப்படும்னு சொல்லுங்க அப்பதான் இவனுங்க அடங்குவானுங்க பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்முன்னு சொல்லுவாங்க


தமிழ்வேள்
டிச 21, 2024 20:59

ஜிஎஸ்டி விகிதத்தை குறைத்தால் மாநிலங்கள் எதிர்க்கும்.. ஆனால் மத்திய அரசு குறைக்கவில்லை என்று கூவும்.. சரியான இரட்டை நிலை..பாஜக இந்த எத்துவாளித்தனத்தை ஏன் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில்லை? ஓவர் தர்ம நியாயம் தேவையில்லை.... தர்மம் பார்த்து அழிந்து கொண்டு இருக்கும் தேசம் இது...


Kumar
டிச 21, 2024 19:52

பொதுவாக எல்லா வரியையும் அதிகப்படுத்தி, செரிவூட்டப்பட்ட அரிசி வரி குறைக்க முடிவு பிரமாதமாக இருக்கு


ganesh ganesh
டிச 21, 2024 19:47

இன்னும் 4 வருடங்கள் எடுத்து கொள்ளுங்கள்


karutthu kandhasamy
டிச 21, 2024 19:08

மத்திய அரசின் பொது துறை ஒய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்ஊதியம் ரூபாய் 900 முதல் 2500 வரை உள்ளது புதுப்பிக்கப்பட்ட ஓய்ஊதியம் 2014 க்கு பிறகு ஒய்வு பெற்றவர்களுக்கு தான் கிடைக்கும் இன்றைய விலைவாசி உயர்வில் குறைந்த பட்சம் மாதம் ரு 10000 மாவது கிடைக்கவேண்டும் விஜய் மல்லையா போன்ற பெரிய பணக்காரனே முடக்கிய தொகை அதிகம் என புலம்புகிறான் ஏழைகளுக்கு இரக்கப்பட்டு உதவி செய்தால் உங்களுக்கு புண்ணியம் .தயவு செய்து ஏழை களுக்கு உதவுங்கள் .வரிமேல வரிபோட்டு எங்களை லொள்ளாதீர்கள் .தினமலர் இதை மத்திய நிதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்


pv, முத்தூர்
டிச 21, 2024 18:56

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பொருட்களைகூட விட்டுவைகவில்லை. தாய்பலுக்கும்கூட கூடியவிரைவில் GST போட்டால் ஆச்சர்யபடுவதர்கில்லை.


Saravanan
டிச 22, 2024 01:04

கிஸ்தி கூட்டத்துக்கு போன மாநில முதல்வர்கள் என்ன செய்கிறார்கள் அங்கே வாய மூடிக்கிட்டு மிச்சர் சாப்பிட வேண்டியது கூட்டம் முடிந்து வெளியே வந்தவுடன் மோடி ஒழிகன்னு கத்தவேண்டியது


raja
டிச 22, 2024 04:13

ஏன் துக் லகின் மங்குனி கூட்டத்தில் கலந்து கொள்ளும் போது எதிர்த்தால் அதை நடை முறைக்கு கொண்டுவர முடியாதே...அங்கே போய் மிக்ஸர் சாபிடரானா உடன் பருப்பே...


Barakat Ali
டிச 21, 2024 18:39

பழைய கார் பிசினஸில் கட்சிப் பிரமுகர்கள் இருப்பது காரணமா ????


raja
டிச 21, 2024 18:25

இனி து போன்ற செய்திகளில் தமிழகத்தின் சார்பாக கலந்து கொண்டு விருந்துண்டு சிறப்பித்த திருட்டு திராவிட ஒன்கொள் கோபாலபுரம் கொள்ளை கூட்ட தலைவனின் எந்த மங்குனி கலந்து கொண்டார் என்ற செய்தியையும் சொன்னால் ருவா இருநூறுக்கு முரட்டு முட்டு கொடுக்கும் பரம்பரை கொத்தடிமைகளுக்கும் புரியும்மே.....


Saravanan
டிச 22, 2024 01:14

தங்கம் தென்னரசு - என்ன செய்கிறார் பெட்ரோல் டீசல் விலையை கிஸ்தி வரம்பில் கொண்டு வர சொல்ல வேண்டியது தானே


Barakat Ali
டிச 21, 2024 18:03

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் பழைய கார்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்கள் , மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கான ஜி.எஸ்.டி.,யை 18 ல் இருந்து 12 சதவீதமாக குறைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது ........ சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்குத்தானே ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை