உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒன்பதாவது ஆண்டில் ஜி.எஸ்.டி., : பிரதமர் பெருமிதம், ராகுல் வருத்தம்

ஒன்பதாவது ஆண்டில் ஜி.எஸ்.டி., : பிரதமர் பெருமிதம், ராகுல் வருத்தம்

புதுடில்லி: '' இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான சக்தி வாய்ந்த இயந்திரமாக ஜி.எஸ்.டி., திகழ்கிறது'', என பிரதமர் மோடி கூறியுள்ளார். அதேநேரத்தில் இந்த வரி மக்களுக்கு எதிரானது என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017 ம் ஆண்டு ஜூலை 1 ம் தேதி அறிமுகபடுத்தப்பட்டு இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவு செய்து, ஒன்பதாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. மறைமுக வரி விதிப்பு கட்டமைப்பை எளிமையாக்கி, பல்வேறு விதமான வரி விதிப்புகளை ஒரேகுடையின் கீழ் ஜி.எஸ்.டி., கொண்டு வந்தது. இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:அறிமுகம் செய்யப்பட்ட 8 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தியாவின் பொருளாதாரத்தை வடிவமைத்த ஒரு மைல்கல் சீர்திருத்தமாக ஜி.எஸ்.டி., திகழ்கிறது. சிக்கல்களை குறைத்தன் மூலம், சிறு குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எளிதாக தொழில் செய்வதை மேம்படுத்தி உள்ளது.https://x.com/narendramodi/status/1939979513796206655 இந்திய சந்தையை ஒருங்கிணைத்து மாநிலங்களை சம பங்காளிகளாக மாற்றியதுடன், உண்மையான கூட்டுறவு கூட்டாட்சியை வளர்க்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கான சக்தி வாய்ந்த இயந்திரமாக ஜிஎஸ்டி திகழ்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியள்ளார்.

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்

8 ஆண்டுகள் முடிந்த நிலையில், ஜிஎஸ்டி என்பது வரி சீர்திருத்தம் அல்ல. இது பொருளாதார அநீதிக்கான கொடூரமான கருவி, கார்பரேட்டுக்கு ஆதரவானது. எழைகளை தண்டிக்கவும், சிறுகுறு நடுத்தர தொழில்களை நசுக்கவும், மாநிலங்களின் நிதி ஆதாரத்தை குறைக்கவும், பிரதமரின் கோடீஸ்வர நண்பர்கள் பலன் பெறவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சிறந்த மற்றும் எளிமையான வரி அளிப்பதாக உறுதி செய்யப்பட்டது. மாறாக, சிக்கலான மற்றும் ஐந்த அடுக்கு வரி முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. அதுவும் 900 முறை திருத்தப்பட்டுள்ளது. அதிகார குழப்பம் பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. அதில் உள்ள ஓட்டையை அவர்களால் தாண்டி செல்ல முடியும். ஆனால், சிறுகுறு நடுத்தர மற்றும் சாதாரண வர்த்தகர்கள் சிக்கலில் உள்ளனர். தினசரி துன்புறுத்தலுக்கு ஆதாரமாக ஜிஎஸ்டி போர்ட்டல் உள்ளது.https://x.com/RahulGandhi/status/1939979464143741229 நாட்டில்பெரியஅளவில் வேலைவாய்ப்புகுளை உருவாக்கும் சிறுகுறு நடுத்தர தொழில் துறை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.தேநீர் முதல், மருத்துவ சுகாதாரம் வரை குடிமக்கள் ஜிஎஸ்டி செலுத்துகின்றனர். ஆனால், கோடீஸ்வரர்கள் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் கோடிவரை வரிச்சலுகை பெறுகின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை வேண்டும் என்றே ஜிஎஸ்டி வரம்பில் இருந்து தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், விவசாயிகள், போக்குவரத்து தொழிலில் உள்ளவர்கள், சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாஜ., ஆளாத மாநிலங்களை தண்டிக்கும் கருவியாக ஜிஎஸ்டி பாக்கி உள்ளது. இது மோடி அரசின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. இந்திய சந்தைகளை ஒற்றுமைபடுத்தவும், எளிமையான வரி விதிப்புக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் தெளிவான கொள்கையாக ஜிஎஸ்டி இருந்தது. ஆனால், மோசமான முறையில் அமல்படுத்தியது, அரசியல் பாரபட்சம் ஆகியவை காரணமாக அந்த வாக்குறுதி தோல்வி அடைந்துள்ளது. மக்களே முதன்மை, வணிகத்துக்கு ஏதுவாக ஜிஎஸ்டி கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

ராமகிருஷ்ணன்
ஜூலை 02, 2025 09:25

எனக்கு தெரிந்து வியாபாரம் செய்யும் இந்திய முஸ்லிம்கள் GST வரி ஏய்ப்பு செய்கின்றன பற்பல தகிடுதத்த கணக்குகளை காண்பித்து வருகின்றனர் குறைந்தது 3 விதமான பில் புக்ஸ் வைத்து உள்ளனர் வரி லாபம் தங்களுக்கு வரும்படி பார்த்து கொள்கிறார்கள். அதனால முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் புலம்புகிறார்


Natarajan Ramanathan
ஜூலை 01, 2025 21:17

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை வேண்டும் என்றே ஜிஎஸ்டி வரம்பில் இருந்து தள்ளி வைக்கப்பட்டு உள்ளது என்று உளறும் ராவுல் வின்சி காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மூலம் பெட்ரோல் டீசல் இரண்டையும் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டுவர அழுத்தம் கொடுக்காதது ஏன்?


Ramesh Sargam
ஜூலை 01, 2025 21:17

மக்களுக்கு எதிரானது அல்ல இந்த ஜிஎஸ்டி வரி. அது மக்களின் வளர்ச்சிக்கானது. காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள்தான் மக்களுக்கு எதிரானது. தமிழகத்தில் ஏற்பட்ட அந்த திருபுவன காவல்நிலைய மரண சம்பவத்தை பற்றி இந்த ராகுல் ஏதாவது கண்டனம் தெரிவித்தாரா பாருங்கள். ஏதோ பொருளாதார நிபுணர் மாதிரி ஜிஎஸ்டி வரியைப்பற்றி பேச வந்துட்டான்.


Natarajan Ramanathan
ஜூலை 01, 2025 21:14

நாட்டின் பெருமிதம் நமது பிரதமர் மோடி..... நாட்டின் அவமானம் நமது எதிர்க்கட்சி தலைவர் ராவுல் வின்சி.


Narayanan Muthu
ஜூலை 01, 2025 20:08

காங்கிரஸ் கொண்டுவந்த GST வேறு. மக்கள் நலனை கருத்தில் கொண்டு வந்த திட்டத்தை அப்போது எதிர்ப்பு தெரிவித்த கூட்டம் இப்போது மிக கொடூரமாக மாற்றி அதை அமல்படுத்தி மக்களை துன்புறுத்துவது ஏன்.


Narayanan Muthu
ஜூலை 01, 2025 19:55

பெருநிறுவனமுதலாளிகளுக்கு என்றால் துடிதுடித்து போவார்.


Nagarajan S
ஜூலை 01, 2025 19:42

காங்கிரஸ் ஆட்சியில் பல விதமான வரிகள் போட்டு, mathiya அரசு வரி, maanila அரசு வரி என்று தனித்தனியாக வசூலித்தார்கள் ஆனால் தற்போது ஜிஎஸ்டி என்ற பெயரில் மத்திய அரசுக்கு 50% மாநில அரசுக்கு 50% என சேர்த்து ஒரே முறையில் வசூலிக்கிறார்கள். இதில் முன்பு வரிகொடாமல் ஏமாத்தியது போல தற்போது ஏமாற்ற முடியாது.


தாமரை மலர்கிறது
ஜூலை 01, 2025 19:36

உலகின் நம்பர் ஒன் நாடாக இந்தியா திகழ ஜிஎஸ்டி தான் முக்கிய காரணம். ஜிஎஸ்டி வரி வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியை திறம்பட எடுத்துக்காட்டுகிறது. இதுநாள்வரை ஏழை நாடு சொல்லிக்கொண்டு, வரி கட்டாமல் ஏமாற்றிய நபர்கள் வரி கட்டுவதால், நாட்டின் வளர்ச்சி பத்து சதவீதம் உயர்ந்துவருகிறது. வளர்ச்சி அதிகமுள்ள தென் மாநிலங்களுக்கு முப்பத்தைந்து ஜிஎஸ்டியும், வளர்ச்சி குறைவாக உள்ள வடஇந்திய மாநிலங்களுக்கு பதினைந்து சதவீதமாக ஜிஎஸ்டியை குறைத்தால், சீரான வளர்ச்சி இந்தியா முழுக்க இருக்கும். இதனால் வடக்கே இருந்து தமிழகத்திற்கு மக்கள் வர மாட்டார்கள்.


Kulandai kannan
ஜூலை 01, 2025 19:18

GST என்றால் என்னவென்று ராகுலுக்கு புரியுமா?


R Dhasarathan
ஜூலை 01, 2025 19:14

நாடு முன்னேறுகிறது என்றால் வரிகள் குறையும்.. இங்கே வரி விதிப்பு அதிகமாகிறது.


Prasath
ஜூலை 01, 2025 22:30

சுதந்திரம் அடைந்து 70 வருடங்களை காங்கிரஸ் பெரிய ஆணி ஒன்னும் புடுங்கல, பிஜேபி ஆட்சியில் தான் பல வருட வரலாற்று பிழைகளை சரி செய்தது கொண்டே சீரான வளர்ச்சியில் பாரதம் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது