உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜிஎஸ்டி மறு சீரமைப்பு: விலை குறையப்போகும் பொருட்கள்

ஜிஎஸ்டி மறு சீரமைப்பு: விலை குறையப்போகும் பொருட்கள்

புதுடில்லி: பிரதமர் மோடி அறிவித்த ஜிஎஸ்டி மறுசீரமைப்பு மூலம் விலை குறைய உள்ள பொருட்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஷாம்பு, பற்பசை முதல் கார்கள் வரை விலை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு குறித்து அறிவித்தார். தற்போதைய 5%, 12%, 18%, 28% என்ற நான்கு வரி அடுக்குகள், 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்குகளாகக் குறைக்கப்பட உள்ளன. புகையிலை, மது போன்ற பொருட்களுக்கு மட்டும் 40% வரி விதிக்கப்படும். இதனால், பொருட்களின் விலை குறையும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் இந்த வரி சீர்திருத்தம் தொடர்பாக விலை குறைய வாய்ப்பு உள்ள பொருட்கள் என சில பட்டியல் வெளியாகி இருந்தன. இச்சூழ்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் 3 மற்றும் 4 ம் தேதி டில்லியில் நடைபெற உள்ளது.இச்சூழ்நிலையில், தற்போது இந்த வரி சீர்திருத்தம் காரணமாக, ஷாம்பு முதல் மின்னணு சாதன பொருட்கள் வரை விலை குறைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதன்படி, *மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முகப்பூச்சு பவுடர்கள், பற்பசைகள், ஷாம்பு ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.*தீபாவளி முன்னிட்டு பொது மக்கள் அதிகம் வாங்கும் ஏசி, டிவிக்கள் மீதான ஜிஎஸ்டி 28 ல் இருந்து 18 சதவீதமாக குறையக்கூடும்.*உரம், விவசாய கருவிகள் மற்றும் டிராக்டர்கள் மீதான ஜிஎஸ்டி தற்போது 12 முதல் 18 சதவீதமாக உள்ளது இதனை 5 சதவீதமாக குறைக்க திட்டம்*ஜவுளித்துறைக்கும் ஜிஎஸ்டி குறைப்பு செய்ய முடிவு*சிறிய பெட்ரோல் கார்கள் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும்*பொது மக்கள் போக்குவரத்துக்கு பெரிதும் நம்பியுள்ள 350 சிசி இன்ஜீன் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் மீதான ஜிஎஸ்டியையும் குறைக்கவும் முடிவுஅதேநேரத்தில், *4 மீட்டர் நீளம் கொண்ட கார்களுக்கான ஜிஎஸ்டியை 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கவும் திட்டம்*சூதாட்டம், கேசினோ, குதிரை பந்தயம், பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட குளிர்பானங்கள் மீதான வரியை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சகம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு பிறகு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

கிருஷ்ணதாஸ்
செப் 02, 2025 07:58

அனாவசியப் பொருட்கள் விலை குறையும். அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏறும்…..யார் ஆட்சியென்றாலும், இதுதான் நிலை!


Kasimani Baskaran
செப் 02, 2025 04:17

திராவிட வரி என்று மின்சாரத்துக்கே வாடகை வரி போடுகிறார்களே... அதெல்லாம் எதில் வரும்?


M Ramachandran
செப் 02, 2025 01:53

மாநில அரசுகளுக்கு இழப்பு.வேரியேற்றத்தில் தாங்கள் பெட்ற்ற பங்க்கு குறைய வாய்ப்பு அதிகம்.அதனால் விடியல் போன்று கைகோலார்த்து அயல்நாட்டு கைய்யக்கூலிகளும் மறையமுகமகா ஏகாதவது காரணம் சொல்லி எதிர்ப்பார்கள்.


Anantharaman Srinivasan
செப் 02, 2025 00:21

இன்டேன் கேஸ் விலைகுறைப்பு.. அல்லது மானியத்தை அதிகப்படுத்ணும்.


Ramesh Sargam
செப் 01, 2025 23:53

மக்கள் அன்றாடம் சாப்பிடும் அரிசி, பருப்பு விலைகள் மீதான GST வரியை முற்றிலும் எடுக்கவேண்டும். எடுத்தால் ஏழை மக்களுக்கு மிக மிக உபயோகமாக இருக்கும்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 02, 2025 00:29

அதெப்படி செய்ய முடியும்? இப்படி கோடிக்கணக்கான ஏழைபாழைங்க வாயிலேயும், வயித்திலேயும் அடிச்சி பிடுங்கினால் தானே, கார்ப்பரேட் நண்பர்களுக்கு லட்சம் கோடிகளில் வரி தள்ளுபடி செய்ய முடியும்


உண்மை கசக்கும்
செப் 02, 2025 02:03

அரிசிக்கும் பருப்புக்கும் இப்ப ஜி எஸ் டி இல்லையே.


Tamilan
செப் 01, 2025 23:25

சீரமைப்பு என்ற பெயரில் 100 கோடி மக்களை பப்பரமிட்டாய் கொடுத்து ஏமாற்ற நினைக்கும் கும்பல்


Kumar Kumzi
செப் 02, 2025 00:44

பார்ர்ராதமிழன் பெயரில் பதுங்கியிருக்கும் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா மூர்க்கன் கருத்து சொல்ல வந்துட்டா ஹாஹாஹா


Thravisham
செப் 02, 2025 06:30

எவ்வளுவுதான் கழுவி கழுவி ஊத்தினாலும் அந்த 200 ரூவாவுக்காக நீ படற பாடு இருக்கே, ஆஹா ஒஹோ பேஷ் பேஷ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை