உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

ஆமதாபாத்: குஜராத்தில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முடிக்கப்பட்டுவரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தை போன்று குஜராத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த அக்.,27 ல் துவங்கியது, முதல் கட்டமாக வீடு வீடாக எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கப்பட்டு, வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனர். எஸ்ஐஆர் கணக்கெடுப்புக்கு பின்னர் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை குஜராத் மாநில தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டார்.இதன்படி குஜராத்தில் எஸ்ஐஆர் துவங்கப்படுவதற்கு முன்பு மொத்தம் 5,08,43,436 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் பணியைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 4,43,70,109 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்படி 73,73,327 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளனர்.அதில்இறந்தவர்களின் எண்ணிக்கை: 18,07,278ஆய்வின் போது இல்லாதவர்கள்: 9,69,662இடம்பெயர்ந்தவர்கள் :40,25,553மற்ற காரணங்களுக்காக நீக்கப்பட்டவர்கள்: 1,89,364 பேர்பெயர் நீக்கப்பட்டவர்கள் தங்களது ஆட்சேபனைகளை பிப்.,10 ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
டிச 20, 2025 10:31

போற போக்கில மக்கள் தொகை 140 கோடிலேருந்து 70 கோடியாயிடப் போகுது.


ஜெய்ஹிந்த்புரம்
டிச 20, 2025 01:20

கனிவான கவனத்திற்கு


vivek
டிச 20, 2025 05:06

கனிவான கவனத்திற்கு...திருட்டு காங்கிரஸ் கூட்டாளிகளின் சதி என்று தெரிகிறது...


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
டிச 20, 2025 00:03

பீகாரில் இடம்பெயர்கிறார்கள் சரி வளர்ந்த மாநிலங்களான குஜராத்திலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் 40 லட்சம், 66 லட்சம் வாக்காளர்கள் எங்கேதான் செல்கிறார்கள்? இறந்தவர்கள் தனி எண்ணிக்கையில் அடங்குகிறார்கள் இரட்டைப் பதிவு தனியாக நீக்கப்படுகிறது. அப்படியென்றால் இந்த வாக்காளர்கள் கைலாசாவுக்கு போய்விட்டார்களா?


vivek
டிச 20, 2025 05:07

அதில் சிலர் அஜ்மானில் ஒட்டகம் மேய்க்க போய் இருப்பார்கள்.....


சசிக்குமார் திருப்பூர்
டிச 20, 2025 06:30

அதிகமாக வளந்த நாடான திராவிட சென்னையில் மூன்றில் ஒரு பங்கு ஓட்டர்களை நீக்கி இருப்பது. அதுவும் முதல்வர் தொகுதியில்


முக்கிய வீடியோ