வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மற்ற மாநிலங்கள் முன்னெச்சரிக்கை இருக்க வேண்டும்
டபுள் இஞ்சின் சர்க்கார்லே நடக்குது அங்கே. ஆளுக்கு ஒரு கோடி குடுப்பாங்க.
ஆமதாபாத்: குஜராத்தில் பெய்த கனமழை, வெள்ளம் காரணமாக, கடந்த 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.குஜராத்தில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஜூனாகத், துவாரகா, போர்பந்தர், அம்ரேலி, ராஜ்கோட், பாவ்நகர், கட்ச், வல்சாத், காந்திநகர், சூரத் மற்றும் படான் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்களுக்கு மீட்பு படையினர் உதவி செய்து வருகின்றனர். பொடாட் மாவட்டத்தில் ஒரு கார், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மாயம் ஆகி உள்ளனர் என தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கனமழை, வெள்ளம் காரணமாக, கடந்த 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக, குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளனபாதிக்கப்பட்ட 25 மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறுகுஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மற்ற மாநிலங்கள் முன்னெச்சரிக்கை இருக்க வேண்டும்
டபுள் இஞ்சின் சர்க்கார்லே நடக்குது அங்கே. ஆளுக்கு ஒரு கோடி குடுப்பாங்க.