உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிரா கவர்னராக பொறுப்பேற்றார் தேவவிரத்

மஹாராஷ்டிரா கவர்னராக பொறுப்பேற்றார் தேவவிரத்

மும்பை: குஜராத் கவர்னர் ஆச்சாரிய தேவவிரத் இன்று (செப்.15) மஹாராஷ்டிரா கவர்னராக கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டார்.மஹாராஷ்டிரா கவர்னராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் நடந்து முடிந்த துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக ( செப்.09) பதவியேற்றார் அவர் வகித்த கவர்னர் பதவி, கூடுதல் பொறுப்பாக குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவவிரத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் மஹாராஷ்டிரா கவர்னராக கூடுதல் பொறுப்பேற்றார். அவருக்கு மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசேகர் பதவிபிரமாணம்செய்து வைத்தார்.இந்தவிழாவில் முதல்வர் தேவேந்திரபட்னாவிஸ், துணை முதல்வர்கள்ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார், சட்டசபை சபாநாயகர் ராகுல் நவ்ரேகர், உள்ளிட்டோர்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ