புட்டபர்த்தியில் குரு பூர்ணிமா விழா
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
புட்டபர்த்தி: புட்டபர்த்தியில் உள்ள பிரஷாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா நிகழ்வு நேற்று நடந்தது. குரு வந்தனம் தெய்வீக பாடலுடன் துவங்கிய நிகழ்வில், ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்புகளின் தலைவர் நிமிஷ் பாண்டியா மற்றும் உறுப்பினர் நாகானந்த் ஆகியோர் ஆன்மிக உரையாற்றினர்.
Galleryசிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான், 'நான் ஒரு சத்ய சாய்பாபாவின் தீவிர பக்தன்' எனவும், பகவானின் போதனைகள் மற்றும் இந்தியாவின் ஆன்மிக வல்லமைகள் குறித்தும் பேசினார். தொடர்ந்து, 100 விவசாயிகளுக்கு, விவசாய உபகரணங்கள் வழங்கினார்.