உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மே.வங்கத்தில் மம்தாவின் எதிர்ப்பையும் மீறி முகாம்களை பார்வையிட்ட கவர்னர்

மே.வங்கத்தில் மம்தாவின் எதிர்ப்பையும் மீறி முகாம்களை பார்வையிட்ட கவர்னர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் வக்ப் சட்டத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக முகாம்களில் தங்கி உள்ள மக்களை கவர்னர் சிவி போஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் குறைகளை கேட்டறிந்தார்.மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் வக்ப் வாரிய சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gidtxtux&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளமானோர் மால்டாவில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து பேச கவர்னர் சிவி போஸ் முடிவு செய்தார். ஆனால், இந்த பயணத்தை தள்ளி வைக்க வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.ஆனால், அதனை ஏற்காத கவர்னர் சிவி போஸ், கள நிலவரத்தை நேரில் தெரிந்து கொள்ள வேண்டும். கலவரம் தொடர்பாக கிடைத்த தகவல்கள் உண்மையா என ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவமனை, முகாம்களுக்கு செல்வேன். மாநிலத்தில் இயல்பு நிலை திரும்ப மத்திய படையினர் மற்றும் மாநில போலீசார் பணியாற்றுகின்றனர். ஆய்வுக்கு பிறகு எனது பரிந்துரையை தெரிவிப்பேன் எனக்கூறினார்.கோல்கட்டாவில் இருந்து ரயில் மூலம் மால்டா வந்த கவர்னர், முகாம்களில் தங்கி உள்ள மக்கள் மற்றும் குழந்தைகளை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர்கள் தெரிவித்த குறைகளை கேட்டறிந்தார். மருத்துவமனை சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.தொடர்ந்து அவர் கூறுகையில், சமூக விரோதிகள் வந்து தங்களை தாக்கியதுடன், தங்கள் வீடுகளை சேதப்படுத்தினர். சொத்துகளை கொள்ளையடித்து சென்றனர். வேறு வழியில்லாமல் முகாம்களுக்கு வந்ததாக பெண்கள் புகார் கூறினர் என தெரிவித்தார்.இதனிடையே, மீடியாக்களிடம் பேச தங்களை அனுமதிக்கவில்லை என நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்கள் குற்றம் சாட்டினர். அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தடுப்புகளை உடைத்து எறிந்தனர். போலீசார் எங்களை கிரிமினல் போல் நடத்துவதாகவும், சரியான உணவு வழங்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

NACHI
ஏப் 19, 2025 13:43

மம்தா ஆட்சியை களைக்கபடும் ...கூடிய சிக்கிரம்


Barakat Ali
ஏப் 19, 2025 10:34

சட்டம் ஒழுங்கைக் கண்காணிப்பது ஆளுநரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதே .... அவரது முக்கியப்பணி, கடமை அது .... சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் ஆட்சியைக் கலைக்க ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கும் அதிகாரம் அவரிடம் உள்ளது ..... ஆகவே மேற்குவங்க ஆளுநர் அரசியல் சட்டம் தனக்கு வழங்கிய அதிகாரத்தை மீறவில்லை .....


MARUTHU PANDIAR
ஏப் 19, 2025 10:06

நிலைமை கை மீறுவதற்கு முன்னாளல் நாட்டில் ராணுவ ஆட்சியை பிரகடனப் படுத்துவது தான் ஒரே வழி. இந்த வாய்ப்பையும் விட்டால் அவுரங்க சீப்பு ஆட்சி தான் . மக்களின் மூளைச்சலவை மின்னல் வேகத்தில் நடந்தேறுகிறது என்கிறார்கள்.


thehindu
ஏப் 19, 2025 09:01

இந்து மதவாத குண்டர்களின் அங்கம் கவர்னர் . குண்டர்களுக்கு ஆதரவளிப்பது, ஊக்குவிப்பது தினமலர்


Tetra
ஏப் 19, 2025 11:24

ஏண் அயோக்கியத்தனத்தை செய்துட்டு பாவப்பட்ட ஹிந்துக்களை பழிக்கிறியா?


கைலாஷ்
ஏப் 19, 2025 08:37

கிழிந்தது போ. இப்போதான் பார்வை இடுகிறாரா! இந்துக்கள் அங்கு தாக்கபட்டு இரத்தம் வழிந்தோடும் வீடியோக்கள் இணைய தளத்தில் உள்ளது. இவர் பார்வையிட்டு report தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி, ஐயோ...


சந்தீப்
ஏப் 19, 2025 07:59

இந்துக்களை இந்தியாவில் முகாம்களில் சந்திப்பது மிக வேதனையான விசயம்


Iyer
ஏப் 19, 2025 07:56

300 - 400 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் - ஹிந்து சனாதனமும் அதை சார்ந்த சீக்கியர், புத்தர், ஜைனர்கள் மட்டுமே இருந்தனர். இப்போது உள்ள முஸ்லிம்கள், கிறித்தவர்களின் முன்னோர்கள் - BY FORCE மதம் மாற்றப்பட்டவர்கள். ஆகையால் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களும், கிறித்தவர்களும் உடனே ஹிந்து சனாதனத்துக்கு மாற உத்தரவு இடவேண்டும். வாக்குரிமை ஹிந்துக்களுக்கு, அதை சார்ந்த மதத்தினருக்கும் மட்டுமே கொடுக்கணும்.


Iyer
ஏப் 19, 2025 07:48

J & k வில் நமது காஷ்மீரி பண்டிதர்களே அகதிகளாக வாழ்கிறார்கள். மேற்குவங்கத்தில் முஸ்லீம் பெரும்பான்மை ஆகிக்கொண்டுள்ள நிலையில் - ஹிந்துக்கள் அகதிகளாக மாறிவருகின்றனர் தமிழ்நாட்டில் MUSLIM MAJORITY ஆகிவரும் இலாக்கங்களில் ஹிந்துக்கள் வழிபாடு நிறுத்தப்படுகிறது. ஹிந்துக்கள் ஒன்று பட்டு தற்காப்பு செய்துகொள்ளணும்.


Kasimani Baskaran
ஏப் 19, 2025 06:54

தீம்க்காவுக்கு ஓட்டுப்போடும் தங்களை இந்து என்று நினைத்துக்கொண்டு இருக்கும் அடிமைகள் இதைப்பார்த்தாவது திருந்தவேண்டும். மதுரையில் ஒரு தறுதலையை வைத்து கலவரத்தை மூட்ட முயன்றது ஒரு சிலருக்கு நினைவில் இருக்கலாம்.


Raj
ஏப் 19, 2025 06:10

மேற்கு வங்கம் பாக்கிஸ்தான் மாறிவிட்டது சொந்த நாட்டிலேயே அகதியாக இருப்பது வேதனை


சமீபத்திய செய்தி