உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதே 9ம் தேதி! மாதம் ஒன்று, சம்பவங்கள் இரண்டு! ஐ.ஐ.டி., விடுதியில் திக்திக்...

அதே 9ம் தேதி! மாதம் ஒன்று, சம்பவங்கள் இரண்டு! ஐ.ஐ.டி., விடுதியில் திக்திக்...

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கவுகாத்தி; கவுகாத்தி ஐ.ஐ.டி., கல்வி நிறுவன விடுதியில் மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விடுதி அறையில் சடலம்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் உள்ளது. நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர். இந் நிலையில் கல்லூரி விடுதியில் உள்ள அறை ஒன்றில் இருந்த பிம்லேஷ் குமார் என்பவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பி.டெக்., 3ம் ஆண்டு மாணவரான அவர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்.

திடீர் போராட்டம்

விடுதியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக சக மாணவர்கள் குற்றம்சாட்டினர். இந்த சம்பவத்தை கண்டித்து அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்,

நடவடிக்கை

போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மாணவர்களின மனநிலை மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசர அவசியத்தை இந்த சம்பவம் வலியுறுத்தியுள்ளது.

அதே 9ம் தேதி

கடந்த மாதம் 9ம் தேதி இதே கல்வி நிலைய வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த எம்.டெக். மாணவி சவுமியா என்பவர் தற்கொலை செய்து கொண்டார். சரியாக ஒரு மாதம் கழித்து அதே 9ம் தேதியில் மற்றொரு மாணவர் மரணம் அடைந்துள்ள சம்பவம் அங்குள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கல்விச்சுமை

மாணவர்களின் இத்தகைய முடிவுகளுக்கு கல்விச்சுமையே காரணம் என்று கூறப்பட்டாலும், அவர்களின் மனநிலையை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வகையில் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

duruvasar
செப் 10, 2024 11:49

நான் சென்ஸ். பொங்குவதற்க்கு முன் அந்த அன்பரின் கருத்தை இன்னொரு முறை படித்து பார்கவும் குறிப்பாக ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ள கடைசி வரிகள். தாங்கள் ஒரு முரட்டு திராவிடன் போல் தெரிகிறது.


sethu
செப் 10, 2024 10:20

பாசிட்டிவான கருத்துக்கள் அவசியம் சொல்லுங்க


M Ramachandran
செப் 10, 2024 09:52

நம் தமிழ்நாட்டு கல்லூரிகள் இது மாதிரியெல்லாம் பாட சுமைய்ய கிடையாது கல்லொற்றிக்கு அறுவதென ஜாலியா பொழுது போக்கவும் போதை பொருள் உபயோகா படுத்தும் முறையில் நிகிலாவான கண்டு பிடிப்புங்கள் நடத்தவும். எப்படியிருந்தாலும் தேர்வில் எல்லாம் பாஸ். வேலைக்கு ஒபார்கள் முட்டி கொள்ளட்டும் என்ற சமசீர் கொளகை.


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
செப் 10, 2024 09:41

நான்சென்ஸ். இட ஒதுக்கீட்டில் வந்தால் சாகட்டுமா ? அந்த மாணவியை தன் மகளாகக் கருதாவிட்டாலும் ஒரு உயிராகக் கருதமுடியாத அன்பில்லாத நெஞ்சிடம் இருந்துதான் இத்தகைய கருத்துக்கள் வரும்


chennai sivakumar
செப் 10, 2024 07:33

இட ஒதுக்கீட்டில் சேர்ந்து இருப்பார் என்று எண்ணுகிறேன். Not used to pressure could also be a reason.


Subramanian
செப் 10, 2024 07:26

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


புதிய வீடியோ