உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹத்ராஸ் சம்பவம் : போலே பாபா தலைமறைவா ?

ஹத்ராஸ் சம்பவம் : போலே பாபா தலைமறைவா ?

ஹத்ராஸ்: உ.பி மாநிலம் ஹத்ராசில் ஆன்மிக சொற்பொழி நிகழ்வில் சமூக விரோதிகள் சிலர் ஊடுருவினர். அவர்கள் தான் சம்பவத்திற்கு காரணம் என போலே பாபா தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேசத்தில், ஹத்ராஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூட்டம் முடிந்து வெளியேறிய போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 116 பேர் உயிரிழந்தனர்.

ஆக்ரா நிகழ்ச்சி ரத்து

முன்னதாக ஹத்ராஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலே பாபா கூறியது, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் சமூக விரோதிகள் சிலர் ஊடுருவியிருக்கலாம், அவர்கள் தான் இதற்கு காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே ‛ஆக்ரா' வில் நடத்த திட்டமிட்டிருந்த அடுத்த ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வை போலே பாபா ரத்து செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தலைமறைவு ?

இந்நிலையில் போலீசார் தெரிவித்துள்ளதாவது, போலேபாபா என்ற நாராயண் ஹரியின் உண்மையான பெயர் சூரஜ்பால்சிங் , அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். ஹத்ராஸ் நிகழ்ச்சி நடத்த 80 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றதால் இச்சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
ஜூலை 04, 2024 10:43

எல்லா மத சாமியார்களையும் தடை செய்ய வேண்டும்!


Jesu Raj
ஜூலை 04, 2024 07:46

எந்த சம்பமா இருந்தாலும் தவறு தவறு தானே இதற்கு மட்டும் உ.பி முதல்வர் ராஜினாமா செய்வாரா இப்படி தவறுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பது காலம் காலமாக இருக்கிறது அதற்காக எப்போதும் அடுத்தவரை குறை சொல்வது தான் தவறு


தாமரை மலர்கிறது
ஜூலை 04, 2024 01:04

விபத்துகள் நேர்வது இயற்கை. அடுத்தமுறை நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதை பெரிதுபடுத்தி பூதாகாரமாக்க வேண்டிய அவசியமில்லை.


raman
ஜூலை 04, 2024 00:50

முதலில் இவர்கள் எந்த மதம் என்று தெரிவியுங்கள்.


ஜில்லு
ஜூலை 03, 2024 23:27

கொலவெறி போலிருக்கு.


T.sthivinayagam
ஜூலை 03, 2024 21:51

ஆன்மீக கொலைகளை பற்றி பேசாத ஊடகங்கள் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள்


R KUMAR
ஜூலை 03, 2024 21:40

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள்தான், நிகழ்ச்சி முடிந்த பின்னர் கூடியிருந்த மக்கள் எவ்வித கஷ்டமும் இன்றி வெளியே செல்ல தக்க ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டுமே தவிர, சொற்பொழிவு ஆற்றியவர் என்ன செய்வார்.? அவர் மீது குற்றம் இல்லை. எண்பதாயிரம் மக்கள் கூடிட அனுமதி கொடுத்த காவல் துறை, அளவுக்கதிகமாக மக்கள் கூடும் வரையில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்களும் தங்களுடைய கடமையை ஒழுங்காக செய்யவில்லை. கடமை தவறியதற்காக அவர்களும் தண்டனைக்குரியவர்களே.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ