உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாதி எரிந்த வாலிபர் உடல் மீட்பு

பாதி எரிந்த வாலிபர் உடல் மீட்பு

புதுடில்லி;வடக்கு டில்லி நரேலா- - பாவானா மேம்பாலம் அருகே, பள்ளிக்குப் பின்புறம் காட்டுப் பகுதியில் நேற்று காலை, 7:00 மணிக்கு பாதி எரிந்த நிலையில், 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் கிடந்தது. தகவல் அறிந்து நரேலா போலீசார் சென்று, உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.உடல் கிடந்த இடத்தில் இருந்து, 150 மீட்டர் தூரத்தில் ஒரு பைக் இருந்தது. குற்றப் பிரிவு போலீஸ் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். கொலை செய்யப்பட்டுக் கிடந்தவர், நரேலா சுதந்திர நகரைச் சேர்ந்த கபில் தஹியா என்ற கார்த்திக்,20, என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ