மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
27 minutes ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
31 minutes ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
34 minutes ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
36 minutes ago
ஹாவேரி: ஹனகல் கற்பழிப்பு வழக்கு தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையத்துக்கு, கர்நாடகா டி.ஜி.பி., அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.ஹாவேரி ஹனகல்லில் வேறு மதத்தை சேர்ந்த ஆண் நண்பருடன் லாட்ஜில் தங்கி இருந்த முஸ்லிம் பெண்ணை, அவரது சமூகத்தை சேர்ந்த வாலிபர்கள், சரமாரியாக தாக்கியதுடன், அவரை காரில் கடத்திச் சென்று, கூட்டு பலாத்காரம் செய்தனர்.இதுகுறித்து ஹனகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏழு பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த, மேலும் ஒருவர் கோவாவில் நேற்று கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, கர்நாடகா டி.ஜி.பி., அலோக் மோகனுக்கு, தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் வழக்கு தொடர்பான அறிக்கையை, தேசிய மகளிர் ஆணையத்திடம், டி.ஜி.பி., நேற்று தாக்கல் செய்துள்ளார்.
27 minutes ago
31 minutes ago
34 minutes ago
36 minutes ago