உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுவன், சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு

சிறுவன், சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு

புதுடில்லி:தென்மேற்கு டில்லி நானக்புராவில் வசிக்கும் ஒருவர் தன் ஆறு வயது மகளைக் காணவில்லை என கடந்த 19ம் தேதி புகார் செய்தார். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.அந்தச் சிறுமி பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகருக்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்படையினர் பதிண்டாவுக்கு விரைந்தனர். ஆனால், அங்கிருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாருக்கு சிறுமி சென்றது தெரிய் வந்தது.தனிப்படையினர் ஹரித்வார் சென்று தீவிர தேடுதல் வேடை நடத்தினர். கடந்த 21ம் தேதி சிறுமியைக் கண்டுபிடித்தனர். டில்லி அழைத்து வரப்பட்டு விசாரணைக்குப் பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.அதேபோல, கடந்த 23ம் தேதி சத்ய நிகேதன் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது, சத்ய நிகேதன் பஸ் ஸ்டாண்டில் ஆறு வயது சிறுவன் அழுதுகொண்டிருந்தான். அவனை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.சிறுவனின் பெற்றோர் டில்லி கட்வாரியா சாராயில் வசிப்பதாகக் கூறினான். ஆனால், அங்கு அழைத்துச் சென்ற போது சிறுவனின் வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுவன் கூறிய அடையாளத்தை வைத்து, முனிர்காவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, தன் வீட்டுக்குச் செல்லும் வழியை சிறுவன் கூறினான். அவன் வீடு கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை