உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதெல்லாம் ரொம்ப தவறுங்க; இண்டிகோவுக்கு இணையத்தில் இடி: களமிறங்கி கதறடித்த பிரபலம்!

இதெல்லாம் ரொம்ப தவறுங்க; இண்டிகோவுக்கு இணையத்தில் இடி: களமிறங்கி கதறடித்த பிரபலம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வயதான தம்பதியை இருக்கை மாறி உட்கார சொன்ன, இண்டிகோ குழுவினரை பிரபல கிரிக்கெட் விமர்சகரும், வர்ணனையாளருமான ஹர்ஷா போக்லே சமூக வலைதளத்தில் கண்டித்தார். நடந்த சம்பவத்துக்கு இண்டிகோ நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி இருந்து வருவது தெரிந்த விஷயம் தான். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 25) விமானத்தில் வயதான தம்பதியின் இருக்கைகளை மாற்றியதற்காக, இண்டிகோ நிறுவனத்தை பிரபல கிரிக்கெட் விமர்சகரும், வர்ணனையாளருமான ஹர்ஷா போக்லே கடுமையாக சாடியுள்ளார்.

இருக்கை விவகாரம்

அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,''4ம் இருக்கைக்கு டிக்கெட் எடுத்த வயதான தம்பதியை விளக்கம் ஏதும் அளிக்காமல், 19வது இருக்கைக்கு இண்டிகோ விமானி மாற்றினார். அந்த வயதான தம்பதி, நீண்ட நேரமாக போராடி சென்றனர். நடக்க முடியாமல், அந்த முதியவர் குறுகிய பாதையில் தட்டுத்தடுமாறியபடி சென்றதை பார்க்கவே கஷ்டமாக இருந்தது. வயதான பயணிகளுக்கு இப்படி ஒரு துன்பம் கொடுத்ததை பொறுத்து கொள்ள முடியாது. இது அநியாயம் என்று பயணிகள் சிலர் எதிர்த்துக் குரல் கொடுத்ததை தொடர்ந்து, மீண்டும் அந்த தம்பதிக்கு அவர்கள் கேட்டிருந்த இருக்கை ஒதுக்கித் தரப்பட்டது. ஆனால், இதற்காக அவர்கள் சிரமப்பட்டு குரல் கொடுக்க வேண்டியிருந்தது. எப்போதும் பயணிகள் வசதிக்கே முன்னுரிமை அளிக்குமாறு ஊழியர்களுக்கு இண்டிகோ நிறுவனம் அறிவுறுத்த வேண்டும். வெற்றிகரமாக ஒரு பணியை செய்யும்போது, அதற்கு தகுந்தபடி பொறுப்பும் அதிகரிக்க வேண்டும். இந்திய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை கண்டு பெருமைப்படுபவன் என்ற முறையில், பயணிகளின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்; அக்கறையற்ற செயல்பாடு நிறுவன வழிமுறையாகி விடக்கூடாது,'' என குறிப்பிட்டு இருந்தார்.

இண்டிகோ பதில்

இதற்கு பதில் அளித்து இண்டிகோ நிறுவனம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதற்கு மனப்பூர்வமாக வருந்துகிறோம். போக்லே, இதை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து, எங்களுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. உங்கள் புரிதலை நாங்கள் உண்மையிலேயே பாராட்டுகிறோம். விரைவில் உங்களுக்கு மீண்டும் சேவை செய்ய எதிர் நோக்குகிறோம். பயணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் வசதியாகப் பயணம் செய்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இண்டிகோ நிறுவனம் பதில் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ravi varman
ஆக 26, 2024 16:57

Really the indigo is not ready serve a water also on before fly we have to drink water


jayvee
ஆக 25, 2024 18:11

கால் டாக்ஸி போல நடக்கும் இண்டிகோ .. பைலட் மட்டும் எப்படி இருப்பார்..


Suthakar Bose
ஆக 25, 2024 17:26

இண்டிகோ ஒரு ஒர்ஸ்ட் சேவை செய்யும் நிறுவனம். டெல்லி டு மதுரை சேவை என் அனுமதி இல்லாமல் சீட் மாற்றி உளைச்சலை எற்படுத்திவிட்டனர் . என் ப்ரோக்ராம் கூட கேன்சல் ஆகிவிட்டது.


DUBAI- Kovai Kalyana Raman
ஆக 25, 2024 17:00

தமிழ்நாடு போகும் இண்டிகோ flight ல கூட தமிழ் பேசும் airhostos இருக்க மாட்டாங்க , இன்டர்நேஷனல் ல விடுங்க , லோக்கல் , தமிழ்நாட்டுக்குள் ஓடும் flight ல தமிழ் தெரியாத ஏர் ஹோஸ்டஸ் , வெட்கம் இல்லாமல் , ஹிந்தி, ஒரிய , நேபாளி பேச தெரியும் னு அறிவிப்பு வேற .. கோவை - சென்னை , மதுரை - சென்னை flight


Balaji
ஆக 25, 2024 16:27

அந்த பயணிகளுக்கு முன்பே அந்த இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தால் பிறகு எதற்க்காக விமானி அவர்களை இடம் மாறி அமரச்சொன்னார்? அந்த காரணம் வெளிச்சத்திற்கு உலகறிய வர வேண்டும்.. அப்போது தான் உண்மை விளங்கும்.. பயணிகளை இடம் மாறி அமரச்சொல்ல விமானிக்கு அதிகாரம் உள்ளதா என்ன?


தியாகு
ஆக 25, 2024 15:42

என்ன நடந்தா என்ன? ரயில் மாதிரி விமானத்திலும் கும்பல் அலை மோதுது. தின்னா தின்னு, தின்னாட்டிப் போ கதை தான்.


நிக்கோல்தாம்சன்
ஆக 25, 2024 15:12

முன்பொருமுறை மாற்றங்களிடம் ஸ்பைஸ்ஜெட் இருந்த பொது இப்படி நடந்துள்ளது


பாமரன்
ஆக 25, 2024 14:26

வாடிக்கையாளர் சேவைகளில் மிகவும் மோசமான ஏர்லைன் இந்த இன்டிகோ... நாட்டில் அறுபது சதவீதத்திற்கும் அதிகமான மார்கெட் ஷேர் இருப்பதால் சில இடங்களுக்கு கட்டாயம் இதில் பயணம் செய்ய வேண்டியுள்ளது... முன்னே பின்னே வேறு சர்வீஸ் இருந்தால் ஒருபோதும் இன்டிகோவில் பயணம் செய்வதற்கு என்னைப் போன்றோர் தவிர்ப்பர்...இன்டிகோ ஃப்ளைட் ஏறும் முன் தண்ணீர் குடித்து விடுங்கள்... அவளுக ஃப்ளைட்ல யாவாரம் ஆரம்பிச்சா உயிர் போகுதுன்னு கதறினாலும் கண்டுக்க மாட்டாளுக... ட்ரைனிங் அப்படி...


Raghavan AK
ஆக 25, 2024 12:59

For me and my wife, this happened with Lufthansa.


sankar
ஆக 25, 2024 12:54

அடிக்கடி இண்டிகோ விமானத்தில் செல்கின்றவன் என்ற முறையில் இதை எழுதுகிறேன் .. வேறு வழியில்லாமல் இந்த விமானத்தில் நான் பயணம் செய்யவேண்டி உள்ளது .. வாடிக்கையாளர் சேவை என்பது 0 சதவீதம் .. நாம் இ டிக்கெட் வாங்கும் சமயத்தில் , மேலும் பணம் கொடுத்தால் மட்டும்மே இருக்கை கிடைக்கும் .. இல்லாவிட்டால் மத்திய இருக்கை ஒன்றுதான் கிடைக்கும் .. அதுவும் குடும்பத்துடுன் செல்லும் போது இந்த பண பிசாசுகள் கொள்ளை அடிக்கும் .


நிக்கோல்தாம்சன்
ஆக 25, 2024 16:34

நிஜம்தான்