உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!

துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ஹரியானா தேர்தல் முடிவில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் 90 பேரும் படுதோல்வி அடைந்துள்ளனர்.ஜம்முகாஷ்மீர், ஹரியானா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அரசியல் களம் தீயாக மாறியது. வேட்பாளர்கள் தேர்வு, பிரசாரம், தேர்தல் வியூகம் என்று அனைத்துக் கட்சிகளும் சுழன்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ry6ol5pc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஹரியானாவில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் நடந்தன. முடிவில், கூட்டணி இறுதி வடிவம் பெற காத்திருந்த ஆம் ஆத்மி, திடீரென தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. பின்னர் பல கட்டங்களாக 90 தொகுதிகளுக்கான கட்சியின் வேட்பாளர்களை அறிவித்தது.வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு ஓட்டுப்பதிவும் முடிந்து, இன்று முடிவுகளும் வெளியாகின. ஹரியானா மாநிலத்தில் பாஜ., காங்கிரஸ் கட்சிகள் இடையே முன்னணி நிலவரம் மாறி, மாறி வந்தது. ஒரு கட்டத்தில் பின்னடைவில் இருந்து பா.ஜ., பெரும்பான்மைக்கு தேவையான 46 தொகுதிகளை கடந்தும் பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது. காங்கிரசும் கிட்டத்தட்ட 35 தொகுதிகள் வரை முன்னிலையில் இருந்தது.இதில் ஆம் ஆத்மி என்ற கட்சியின் 90 வேட்பாளர்களும் தொடக்கம் முதலே கடும் பின்னடைவில் இருந்தனர். பா.ஜ., காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களே முன்னிலை, பின்னடைவு என்று மாறி, மாறியே அரசியல் களம் இருந்தது. ஒரு தொகுதியில் கூட எங்கும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலையிலேயே இல்லை. 5 சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலை வகித்த நிலையில் ஆம் ஆத்மியின் சுவடே காணப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவிடப்பட்ட ஓட்டு எண்ணிக்கை நிலவரத்திலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. வெறும் 1.48 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளதாக பதிவிடப்பட்டு உள்ளன.வாய்ச்சவடால் பேசிய ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்கின்றனர் பா.ஜ., காங்கிரஸ் தொண்டர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Sivagiri
அக் 08, 2024 20:11

ஆக , கெஜாவால் - காங்கிரஸ் ஓட்டை பிரித்து - ஒரு நல்ல காரியம் பண்ணீருக்கார் ? . .


bgm
அக் 08, 2024 19:12

டெல்லி தேர்தலுக்கான முன்நோட்டம்


என்றும் இந்தியன்
அக் 08, 2024 17:49

பரவாயில்லையே இந்தியாவில் மக்களும் இருக்கின்றார்கள் வெறுக்கும் மாக்கள் அல்ல என்று சொல்கின்றது இந்த தீர்ப்பு என்று வைத்துக்கொள்ளவேண்டும்


sankaranarayanan
அக் 08, 2024 17:26

மக்கள் துடைப்பத்தை கையிலேந்தி அடிக்காமல் விட்டார்களே அதே பெரிது ஓடிவிடங்கள் இனி தலை காட்டாமல் இதே கதிதான் இனி தலைநகரில் விரைவில் நடக்க இருக்கிறது


Rasheel
அக் 08, 2024 16:57

அமெரிக்கா CIA ஏஜென்ட். வெளியில நேர்மை. உள்ளே ஒரே ஊழல் இது தான் உண்மை.


venkatan
அக் 08, 2024 15:49

லஞ்ச ஊழலை ஒழிக்க ஏற்படுத்தப்பட்ட இயக்கம் என்ற தெளிந்த நீரோடை அரசியல் என்ற சாக்கடையில் சங்கமித்து கட்சி என்ற உப்புக்கடலில் ஐக்கியமாகி, அதுவும் தூர்ந்துவிட்டது.இதை ப் புனிதமாக்க கடவுள்தான் அவதாரம் எடுக்க வேண்டும்


Narayanan
அக் 08, 2024 15:00

ஆம் ஆத்மீ கட்சி கலைக்கப்படவேண்டும் . ஊழலை எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சி ஊழலைத்தான் செய்கிறது . தலைவரே செய்கிறார் . அந்த கட்சி இனி எடுபடாது . கிட்டியவரை போதும் என்று கேஜ்ரிவால் கட்சியை கலைக்கப்பாருங்கள் .


RAMAKRISHNAN NATESAN
அக் 08, 2024 13:16

முக்கியமான விஷயம் ஆம் ஆத்மி மீதான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஹரியானா மக்கள் ஆதரிக்கிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் ..... இனி எக்காலத்திலும் ஆம் ஆத்மி தேற வாய்ப்பில்லை ...


Sridhar
அக் 08, 2024 13:00

எதற்க்கெடுத்தாலும் மக்கள் மன்றம் மக்கள் மன்றம் என்று சொல்லி கோர்ட்டுகளின் தீர்ப்பை விமரிசம் செய்து வந்த கெஜ்ரி இப்போது என்ன சொல்லப்போகிறான்? இத்தனைக்கும் ஹரியானா அவன் பிறந்த ஊரு அங்கெ அவனை அடிக்காத குறையாக நின்ற எல்லா இடங்களிலும் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு தானாகவே ஜெயிலுக்கு போயி தண்டனை அனுபவிப்பது டீசண்டான குடும்பத்தில் பிறந்த பிறவிகள் செய்யும்.


தியாகு
அக் 08, 2024 17:35

அது எப்படிங்க ஒத்துக் கொள்ள முடியும். நாங்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தின்மீது குறைகூறி தப்பித்து விடுவோம்


HoneyBee
அக் 08, 2024 12:42

மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்பது இந்த துடப்பத்துக்கு தெரிந்து இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை