உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., ஆம் ஆத்மி கூட்டணி; ஹரியானாவில் தேர்தல் களம்; பங்கு பிரிக்கும் பேச்சு துவக்கம்!

காங்., ஆம் ஆத்மி கூட்டணி; ஹரியானாவில் தேர்தல் களம்; பங்கு பிரிக்கும் பேச்சு துவக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன.ஹரியானாவில், 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அக்.,5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ., காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டாக போட்டியிட்டு மொத்தமுள்ள 10ல் காங்., 5 தொகுதிகளில் வென்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k48i302i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆம் ஆத்மி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் அதிருப்தி இருந்தது. டில்லியில் கூட்டணி இருந்தும் பா.ஜ., தான் வென்றது. இதனால் இனி மேல் கூட்டணி கிடையாது என்று ஆம் ஆத்மி நிர்வாகிகள் அறிவித்திருந்தனர்.

கூட்டணி முடிவு

இந்நிலையில், ஹரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடக்கிறது. அதில் ஆம் ஆத்மி உடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசித்து சொல்லும்படி ஹரியானா மாநில காங்., நிர்வாகிகளிடம் ராகுல் கேட்டார். அவர்களும் கூட்டணி அமைக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது.இதையடுத்து ஆம் ஆத்மி எம்.பி., ராகவ் சத்தா மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர், ஹரியானா தேர்தலுக்கான கூட்டணி குறித்து இரு கட்சிகளும் புரிந்துணர் ஒப்பந்தம் கையெழுத்தானது என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.தற்போது தொகுதிகளை என்ன அடிப்படையில் பங்கு பிரிப்பது, வெற்றி பெற்றால் எப்படி ஆட்சி அமைப்பது என்பது பற்றி பேச்சு நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Velan Iyengaar
செப் 04, 2024 10:55

உலகமகா பணக்கார தேர்தல்பத்திர மெகா ஊழல் கட்சிக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா ?? பூஜ்யத்தில் இருந்து ஒரு நாலு ஐந்து இடமாவது கிடைக்குமா ???


ஆரூர் ரங்
செப் 04, 2024 12:11

சூதாட்ட லாட்டரி வியாபாரியிடம் 550 கோடி தேர்தல் பத்திரங்கள் வாங்கி அனுபவித்த டாஸ்மாக் நாட்டு ஆளும் கட்சி அங்கேயும் போட்டியிடலாம்.


SP
செப் 04, 2024 10:07

ஊழல் வழக்கில்,ஒருவர் உள்ளே. ஒருவர் வெளியே (ஜாமினில்)


Duruvesan
செப் 04, 2024 09:38

பிஜேபிக்கு 3-6 தொகுதி, காங்கிரஸ் ஆப் கூட்டணி 82-87 தொகுதி, கடக்கட் 100000 வருஷம் எல்லோருக்கும், அப்பால விவசாயி கு MSP கொடுப்பாரு, சாதிவாரி கணக்கு உண்டு


sethu
செப் 04, 2024 09:31

ஊழல் நதி மகா ஊழல் ஏரியில் காங்கிரசில் கலப்பதுதானே சரியாக இருக்கும் இந்து மக்கள் மடையர்கள். திமுக 17 கட்சிகளுடன் கூட்டணி எதுக்கு பூத் ஏஜென்ட் சுலபமாக கள்ள ஒட்டு போடமுடியும் அண்ணாமலை இந்த வியூகத்தில் நல்ல முடிவை எடுக்கணும்


Mohan D
செப் 04, 2024 09:29

ரவுல் பேமிலி , கெஜ்ரி, ஒவாய்சி , சிசோடிய, ஸ்டாலின், அகிலேஷ், மம்தா எல்லாருமே சி ஐ ஏ கு வேலைபாக்குறாங்க ..நாட்டுக்காக இல்ல ...மக்கள் தான் உஷாரா இருக்கணும் இல்லாட்டி அடுத்த பங்களாதேஷ் நாம தான் .. இ ன் டி கூட்டணி ஆளும் மாநிலங்களில் இலவசத்தால் தத்தளிக்கிறது இதே நிலைமை நாடுபூரா வந்த என்ன ஆகும் ...இதோ ஹரியானா ல அமைச்சர்களுக்கே சம்பளம் குடுக்க முடியலன்னு ரெண்டு மாசத்துக்கு வேண்டாம்னுட்டாங்க அதுக்கப்புறம் பணம் என்ன மரத்துலயா காய்கும்


Baskaran
செப் 04, 2024 09:21

நெறிமுறை என்ற வார்த்தையை தமிழ் அகராதியில் இருந்து நீகிவிடவெண்டும். காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக களம் இறங்கிய கேஜ்ரிவால் இப்பொழுது ஊழல் கூட்டணி வைத்துள்ளார். ஊழல் ஊழலுடன் தான் சேரும்.


கூமூட்டை
செப் 04, 2024 08:25

என்ன அருமையான கூட்டணி மக்கள் எல்லோரும் என்னுடன் சேர்ந்து விட்டார்கள் வாழ்க வளர்க ஊழல்வாதிகள் வளர்க ஊழல் வாழ்க மருந்து ஆடி மாங்காய்


முக்கிய வீடியோ