உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானா சட்டசபை 13ல் கூடுகிறது

ஹரியானா சட்டசபை 13ல் கூடுகிறது

சண்டிகர்:ஹரியானா சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் வரும் 13ம் தேதி துவங்குகிறது.ஹரியானா சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் பா.ஜ., ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு அக். 17ல் பதவியேற்றது. அதைத் தொடர்ந்து, அக். 25ல் சட்டசபை கூடியது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடந்தது. இதையடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், ஹரியானா சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஹரியானா சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் நவ., 13ம் தேதி காலை 11:00 மணிக்கு துவங்குகிறது' என கூறப்பட்டுள்ளது.சட்டசபை சபாநாயகர் ஹர்விந்தர் கல்யாண் வெளியிட்டுள அறிக்கை:நவ.13ம் தேதி காலை சட்டசபை கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன், அலுவல் ஆலோசனைக் குழு கூட்டம் நடத்தப்படும். அந்தக் கூட்டத்தில், சபை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். எத்தனை நாட்கள் கூட்டத் தொடர் நடத்துவது என்பதும் இந்த ஆலோசனையில் முடிவு எடுக்கப்படும். அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் சட்டசபை குளிர்கால கூட்டத் தொடரில் தவறாமல் பங்கேற்க வேண்டும். நேர்மறை விவாதங்கள் வாயிலாக மட்டுமே மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை