உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்காக உளவு வேலை... பெண் யூடியூபர் உள்பட 6 பேர் கைது

பாகிஸ்தானுக்காக உளவு வேலை... பெண் யூடியூபர் உள்பட 6 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பாகிஸ்தானுக்காக உளவு வேலையில் ஈடுபட்ட பெண் யூடியூபர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.பஹம்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, இந்தியா தக்க பாடம் புகட்டியுள்ளது. இதனால், இருநாடுகளிடையே இடையே பதற்றமான சூழலே நிலவி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r906zicd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், பாகிஸ்தானை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டி வைத்துள்ள மத்திய அரசு, நமது நாட்டில் உள்ள களைகளை எடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. பயங்கரவாதிகளை ஒருபுறம் வேட்டையாடி வந்தாலும், பாகிஸ்தானுக்கு ஆதரவான செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்து வந்தவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், ஹரியானா மற்றும் பஞசாப் மாநிலங்களில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானுக்கு முகவர்களாகவும், ரகசியங்களை கொடுப்பவர்களாகவும், நிதி பரிமாற்றம் செய்பவர்களாகவும் இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். 'டிராவல் வித் ஜோ' என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வரும் ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜோதி மல்ஹோத்ரா கடந்த 2023ம் ஆண்டு கமிஷன் ஏஜெண்ட் மூலம் விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அங்கு பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஸ் எனப்படும் எஹ்சான்-உர்-ரஹீம் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் பல பாகிஸ்தான் உளவுத்துறை நிறுவனங்களுடன் ஜோதிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும், வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்டவைகளிலும் பாகிஸ்தானியருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்திய பகுதிகள் குறித்த ரகசியங்களை அவர்களுக்கு பகிர்ந்து வந்ததுடன், சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளார். ஜோதி மல்ஹோத்ராவிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

raja
மே 18, 2025 19:58

இவள் உளவு மட்டும் பார்க்கவில்லை.பல நாடுகள் ஊர் சுற்றி ... பலருடன் தொடர்பும் வைத்துக்கொண்டாள் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.இவளை எல்லாம் வாழ்நாள் சிறை என்று தண்டனை கொடுக்க வேண்டும்....


venugopal s
மே 18, 2025 12:14

இவர் இஸ்லாமியர் என்று சொன்னால் கூட நம்ப இங்கு ஆட்கள் உண்டு!


metturaan
மே 18, 2025 06:57

உண்ட வீட்டுக்கு இரண்டகம்... வாசம் இங்கு விசுவாசம் அங்கு... குற்றம் உறுதி என்றால் கழுவிலேற்றுங்கள் இந்த நாசகாரியையும் அவள் கூட்டத்தையும்


E. Mariappan
மே 17, 2025 23:27

விசாரணை இன்றி சிறையில் அடைக்க வேண்டும்


Karthik
மே 17, 2025 22:37

இது போன்ற தேச துரோக செயலில் ஈடுபடுவோரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தக் கூடாது , நீதிமன்றம் மூலம் தண்டிக்கவும் கூடாது. மாறாக இந்திய ராணுவமே இதுபோன்ற எச்சக்களைகளுக்கு மரண தண்டனையை பரிசளிப்பதோடு இதுபோன்ற செயலில் ஈடுபட எண்ணுவோருக்கும் எச்சரிக்கை மணி அடித்திட வேண்டும்.


V Venkatachalam
மே 17, 2025 20:16

நல்ல வேளை. இவள் தமிழ் நாட்டுக் காரி இல்லை. அப்படி இருந்தால் இன்னேரம் நம்ம விக்கு தலையர் அறிக்கை மேல் அறிக்கைகள் விட்டு கொண்டு இருப்பார். யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்றும் கூன்பாண்டி எடப்பாடிக்கு மட்டுமே வயிறு எரிகிறது என்றும், டெல்லிக்கு மண்டியிட்டு கூட்டணி வைத்து விட்டார் என்றும், 234 என்ன 244லும் ஜெயிப்போம் ,என்றுமே 2026 என்ன 2031 மற்றும் 2036லும் திமுக ஆட்சி தான் என்றும் ,திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து விடுவார்கள் என்றும் கொஞ்சமும் கூசாமல் அறிக்கை விடுவார்.


கண்ணா
மே 17, 2025 20:08

தடா சட்டத்தில் கைது செய்ய வேண்டும்


ganesh ganesh
மே 17, 2025 19:53

அவளது குடும்பத்தையும் நாடு கடத்துங்கள்.


chinnamanibalan
மே 17, 2025 19:38

நாட்டின் பாதுகாப்புக்கு பாதகம் விளைவிக்கும் விதமாக, இங்கு களைச் செடிகள் பல்கி பெருகி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இதுபோன்ற ஈனச் செயல்களை செய்யும் நபர்களை கண்டறிந்து, இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவது அவசியமும், அவசரமும் ஆகும்.


Ramesh Sargam
மே 17, 2025 19:17

அவர்கள் செய்தது உண்மையென்றால் கண்ட உடன் சுட்டுத்தள்ளவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை