உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு: ரூ.5 கோடி ரொக்கம், மதுபானம் பறிமுதல்

காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு: ரூ.5 கோடி ரொக்கம், மதுபானம் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: சட்டவிரோத சுரங்க வழக்கு தொடர்பாக ஹரியானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டில் ரூ.5 கோடி ரொக்கம், 100 பாட்டில் மதுபானம், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.யமுனா நகர் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கிராவல், மண், ஜல்லி ஆகியவற்றை சட்டவிரோதமாக எடுத்தது தொடர்பாக சட்டவிரோத சுரங்கம் தொடர்பான வழக்கில் ஹரியானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுரேந்தர் பன்வர், இந்திய தேசிய லோக்தள கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., தில்பாக் சிங் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மீது ஹரியானா போலீசார் ஏராளமான வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து இந்த விவகாரத்தில் கடந்த 2013ம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், சுரேந்தர் பன்வர் மற்றும் தில்பாக் சிங் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் நேற்று முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில், இருவரது இடங்களிலும் ரூ.5 கோடி ரொக்கம்,100 மதுபாட்டில்கள், சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள், 300 கேட்ரிட்ஜ்கள், 4 முதல் 5 கிலோ தங்க பிஸ்கட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

ellar
ஜன 06, 2024 11:29

துப்பாக்கி வைத்திருப்பது போன்ற போலி கவுரவம் புதிய குற்றவியல் சட்டப்படி மிகவும் கடுமையாக கையாளப்பட வேண்டும்.


Ramesh Sargam
ஜன 06, 2024 06:18

பணம் பதுக்குவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறவம். இப்ப ஏன்னா புதுசா, ஆயுதங்கள், மதுபாட்டில்கள், தங்கம், வெள்ளி என்று எல்லாவற்றையும் பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி எல்லா அரசியல்வாதிகளும் பணத்தை கட்டுக்கட்டாக பதுக்கினால், பொதுபுழக்கத்தில் பணம் எப்படி கிடைக்கும். வங்கி ATM மையங்களில் எப்படி பணம் இருக்கும்? ஆகையால்தான் நாட்டின் பல ATM மையங்களில் 'no cash. sorry for the inconvenience' என்கிற ஒரு போர்டு தொங்கும்.


தாமரை மலர்கிறது
ஜன 05, 2024 21:20

எந்தவொரு திமுக எம் எல் ஏ வீட்டிற்கு போனாலும், குறைந்தது ஐநூறு கோடி ரூபாய் கிடைக்கும். ஐந்து கோடி எல்லாம், திமுக சட்டமன்ற உறுப்பினர் சட்டை பாக்கெட்டில் கிடைக்கும் சிறிய தொகை.


M Ramachandran
ஜன 05, 2024 20:58

பிசாத்து பணம் டாய்லெட் பேப்பர் வாங்கும் அளவு பணம் தான் இது


Godfather_Senior
ஜன 05, 2024 20:17

Congress & corruption inseparable


மு. செந்தமிழன்
ஜன 05, 2024 20:01

இவ்வளவு பணத்தை கொள்ளை அடிச்சு வச்சுக்கிட்டு ஊர ஏமாத்த உண்டிடல் குலுக்கிறானுங்க காங்கிரஸ் காரனுங்க


வெகுளி
ஜன 05, 2024 19:07

காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு விட்டீங்க...ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல் செஞ்சீங்க .... அதெல்லாம் சரி.... அந்த மது பாட்டில்களை ஏன்யா தூக்கிட்டு வந்தீங்க?.... அண்ணன் இப்ப நீர் மோர் குடிச்சுட்டா புலம்ப முடியும்?.... எதிலும் ஒரு நியாயம் வேண்டாமா?...


செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர்
ஜன 05, 2024 18:58

ஏன்யா தெரியாமத்தான் கேக்குறேன் இப்படி கோடி கோடியா எங்க காங்கிரஸ் கட்சிகாரன் வீட்டுல அள்ளிட்டு போனீங்கன்னா நாங்க எப்படிய்யா பாராளுமன்ற தேர்தலுக்கு செலவு பண்ண முடியும்? ஏற்கனவே எங்க கட்சிகாரர் ஒருத்தர்கிட்ட நானூறு கோடியை அள்ளிட்டு போனீங்களே அது பத்தாதா இன்னும் இதுபோல எத்தன பேர்கிட்ட அள்ளிட்டு போறதுன்னு முடிவு பண்ணிருக்கீங்க நீங்க இப்படியெல்லாம் அழிச்சாட்டியம் பண்றதால எங்களோட காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியைப் போல மக்களிடம் உண்டியலை தூக்காம கவுரவமாக டொனேஷன்ற பேர்ல பிச்சையெடுக்க ஆரம்பிச்சுருச்சு இதுக்கு மேலயும் இப்படி எங்களோட காசை அள்ளிட்டு போனீங்கன்னா நாங்க நடுத்தெருவுலதான் நிக்கணும் அதுதான உங்க ஆசை? (தமிழ்) நாட்டுல யார் யாரோ லட்சக் கணக்கான கோடிகளில் கொள்ளை அடிச்சுட்டு ஹாயா சுத்திக்கிட்டு திரியிரானுக அவனுங்கள பிடிக்க இந்த அமலாக்கத்துறைக்கு வக்கில்லை பிசாத்து 300 கோடி 400 கோடிய ஆட்டைய போட்டு சம்பாதித்த பணத்த எங்ககிட்ட வந்து புடுங்கிட்டு போறானுங்க...


duruvasar
ஜன 05, 2024 18:54

இது பிஜேபியின் பழிவாங்கும் செயல் என்ற சத்தம் விண்ணை பிள்ளைக்கப்போகிறது.


Narayanan Muthu
ஜன 05, 2024 18:49

அமலாக்கத்துறையா சிரிப்புதான் வருது. பாஜக அடிமை துறை என்றால் பொருத்தமாக இருக்கும்.


வீரபாண்டி,அலங்காநல்லூர்
ஜன 05, 2024 19:38

அறிவாலய அடிமை என்ற வார்த்தை உனக்கு பொருத்தமாக இருக்கும்.????


Ashok
ஜன 05, 2024 21:43

Katharu Uppi.. Katharu.. Saththamaaaaa


Yaro Oruvan
ஜன 05, 2024 21:52

அறிவாலய அடிமையின் கதறல்


kumar c
ஜன 05, 2024 21:56

அண்ணன் சொல்றபடி பார்த்தா ஒருவேளை அமலாக்க துறையே 5 கோடி வச்சிக்கிட்டு எடுத்திருக்குமோ . ஆனா ஒன்னு போற இடமெல்லாம் கோடியிலதான் காசு பொரளுது . நம்ம வீட்டுக்கெல்லாம் ரெய்டு வந்தால் அவிங்கதான் இரக்க பட்டு காசு தந்துட்டு போகணும்


Bye Pass
ஜன 05, 2024 22:25

செஞ்சோற்றுக்கடன் கழிக்கற கட்டாயம்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி