உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானா காங்., பெண் எம்.எல்.ஏ. , இன்று பா.ஜ.,வில் ஐக்கியம்

ஹரியானா காங்., பெண் எம்.எல்.ஏ. , இன்று பா.ஜ.,வில் ஐக்கியம்

குர்கான்: ஹரியானா காங்., பெண் எம்.எல்.ஏ., கிரண் சவுத்ரி, அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஹரியானாவின் தோஷாஹாம் தொகுதி காங்., பெண் எம்.எல்.ஏ.. கிரண் சவுத்ரி, 68 இவரது மகள் சுருதிசவுத்ரி. இருவரும் காங்.,கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக நேற்று அறிவித்தனர். இன்று இருவரும் டில்லி சென்று பா.ஜ. மூத்த தலைவர்களை சந்தித்து அவர்கள் முன்னிலையில் பா.ஜ.வில் ஐக்கியமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தன் மகள் சுருதிசவுத்ரிக்கு காங்., மேலிடம் எம்.பி.,சீட் தரவில்லை. ஆனால் முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா ஆதரவாளருக்கு சீட் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிருப்தியடைந்த கிரண் சவுத்ரி, தன் மகளுடன் இன்று பா.ஜ.வில் ஐக்கியமாக உள்ளார்.ஹரியானா சட்டசபைக்கு இந்தாண்டு அக்டோபரில் தேர்தல் நடக்கிறது. இந்த சூழ்நிலையில் இருவரும் கட்சியிலிருந்து விலகியது ஹரியானா காங். , கிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

nisar ahmad
ஜூன் 19, 2024 12:30

பஜகவிலும் சீட் கொடுக்கவில்லையென்றால் வேறு கட்சிக்கு மாறுவார் இதை போன்ற பச்சோந்திகளை மக்கள் புந்தள்ள வேண்டும் அதோடு கட்சி மாறும் போது தனது எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்துவிட வேண்டும்.


PARTHASARATHI J S
ஜூன் 19, 2024 08:35

சீட் கிடைக்காதவர்கள் எல்லாம் கட்சி மாறினால் அரசியலில் தார்மீகம் குறையும். அவர்கள் இன்டிபென்டன்ட் ஆக தனது பலத்தில் நிற்க வேண்டும்


Kasimani Baskaran
ஜூன் 19, 2024 06:19

என்ன தயா இதெல்லாம்... பிடித்து போடுவதுதான் போடுகிறார்கள் பத்து எம்பிக்களை போட்டால் நன்றாக இருக்கும்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை