உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாழ்க்கை ஒரு வட்டம்; கட்சி விட்டு கட்சி தாவி நிரூபித்தார் முன்னாள் எம்.பி.,

வாழ்க்கை ஒரு வட்டம்; கட்சி விட்டு கட்சி தாவி நிரூபித்தார் முன்னாள் எம்.பி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ஹரியானாவை சேர்ந்த முன்னாள் எம்.பி., ஒருவர் பா.ஜ.,வுக்கு ஓட்டுக் கேட்ட இரண்டு மணி நேரத்தில் காங்கிரசில் இணைந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.ஹரியானாவை சேர்ந்தவர் அசோக் தன்வர். 2009ல் காங்கிரஸ் சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி., ஆனார். பல கட்சிகளுக்கு சென்று வந்தவர். 2019 ல் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய அவர், 2021ல் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கும், 2022ல் ஆம் ஆத்மியிலும் இணைந்தார். பிறகு அங்கு மனக்கசப்பு ஏற்படவே, அக்கட்சியில் இருந்து விலகி இந்த ஆண்டு பிரதமர் மோடியை புகழ்ந்து பா.ஜ.,வில் இணைந்து பணியாற்றி வந்தார். ஹரியானா மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஜிந்த் மாவட்டத்தில் இன்று பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு ஓட்டு சேகரித்தார்.இது முடிந்த இரண்டு மணி நேரத்தில், நூவ் மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் பிரசாரம் செய்த மேடைக்கு அசோக் தன்வர் வந்தார். அங்கு ராகுல் முன்னிலையில், தாய்க்கட்சியான காங்கிரசில் இணைந்து பா.ஜ., தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Bhaskaran
அக் 09, 2024 16:50

இங்கே வந்தவுடன் புனிதராயிடுவார்


Ramesh Sargam
அக் 03, 2024 21:38

கட்சித் தாவல் தடை சட்டம் இருந்தும் என்ன பயன்? தினம் தினம் குரங்கு மாதிரி அவர்கள் விரும்பும் கட்சிக்கு தாவிக்கொண்டிருக்கிறார்கள் நமது அரசியல் குரங்குகள்.


nagendhiran
அக் 03, 2024 19:01

எங்களுக்கு மாற்று கட்சியில் இருந்து பாஜக வந்தால்தான் பொங்குவோம் கூவுவோம் ஒப்பாரி வைப்போம்? பணநாயகம்னு சொல்லுவோம்? மிரட்டபட்டார்?னு சொல்லுவோம்? பாஜகவில் இருந்து போனால்? கண்டுக்காம இருப்போம்?


ஆரூர் ரங்
அக் 03, 2024 18:34

ஆயாராம் கயாராம் ன்னு ரெண்டு பேர் ஒரே நாளில் பல கட்சிகளுக்குத் தாவும் கலாச்சாரம் துவக்கப்பட்டது ஹரியானாவில்தான். இப்போதைய கதா ஹீரோ ராகுல் காந்தியே.


முக்கிய வீடியோ