கரப்பான் கட்சி கரைந்து விட்டதா?
புதுடில்லி: டில்லியில், கடந்த ஜூனில் பெரும் போராட்டத்தை நடத்தி, பல அரசியல் கட்சிகளை அதிர வைத்தது, கரப்பான் பூச்சி கட்சி. இந்த போராட்டத்தால், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய நேரிட்டது. இப்படிப்பட்ட கட்சியின் நிலை, தற்போது பரிதாபமாக உள்ளது.இந்த கட்சியின் அமைப்புச் செயலராக இருப்பவர் சவுரவ் தாஸ். இவர் தான் தற்போது பிரச்னையில் சிக்கி உள்ளார். இவர் பிறந்தது டில்லி என தெரிவித்திருந்தாலும், பாஸ்போர்ட்டில் புதுச்சேரி என, குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை தற்போது டில்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.தவிர, சென்னைக்கும் தாசுக்கும் தொடர்பு உள்ளது. சென்னை பாஸ்போர்ட் அலுவலகம், அவருக்கு பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. எப்படி, யாரால் இந்த பாஸ்போர்ட் கிடைத்தது என, வெளியுறவுத் துறையும், டில்லி காவல் துறையும் விசாரிக்கின்றன. மேலும், அவரது பாஸ்போர்ட்டில் அப்பா பெயரும் இல்லை.இவர் இந்தியரே அல்ல; நேபாளத்தைச் சேர்ந்தவர் எனவும் சொல்லப்படுகிறது. இந்த பிரச்னை வர காரணம், டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. தாஸ், ஏற்கனவே கெஜ்ரிவால் கட்சியில் இருந்தவர். அங்கிருந்த ஒருவர் தான் தாஸை பற்றி போட்டுக் கொடுத்துவிட்டார் என, பேசப்படுகிறது. 'எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்' என, மறைந்த நடிகர் விவேக் கூறியது போல, எப்படியிருந்த கரப்பான் கட்சி இப்படி ஆகிவிட்டதே.