உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் தாமரை மலரும்; பிரதமர் மோடி உறுதி

டில்லியில் தாமரை மலரும்; பிரதமர் மோடி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, தாமரை மலரும்' என்று நம்பிக்கை வையுங்கள் என டில்லியில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.டில்லியில் 12 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை இன்று (ஜன.,05) பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அவர், மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான புதிய அதிநவீன கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர், நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sii9s9ku&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கி வைத்துள்ளேன். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கும், டில்லிக்கும் மிக முக்கியமானவை; இந்த ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாற பங்களிப்பாளராக இருப்போம். டில்லி சட்டசபை தேர்தலில் தாமரை மலரும் என்று நம்பிக்கை வையுங்கள்.டில்லியை வளர்ந்த இந்தியாவின், தலைநகராக நாம் உருவாக்க வேண்டும். இது எங்கள் கனவு. எனவே, டில்லியின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக பா.ஜ.,வுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மக்களை வலியுறுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் டில்லி மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பா.ஜ., கடுமையாக உழைத்தது. உலகின் 3வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறும். டில்லிக்கு ரூ.75,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்தியாவின் பாரம்பரியத்தின் மகத்தான வடிவத்தை வெளிப்படுத்தும் நகரமாக டில்லி இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நமோ பாரத் ரயிலில் பயணித்த மோடி!

உ.பி. சாஹிபாபாத் - டில்லி நியூ அசோக் நகர் இடையே ரூ.4,600 கோடி மதிப்பீட்டில் நமோ பாரத் ரயிலை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ரயிலில் பயணித்து, மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

pmsamy
ஜன 06, 2025 12:19

பாஜக ஒரு கொடிய நோய் அதை வேரோடு அழிக்க வேண்டும்


அப்பாவி
ஜன 05, 2025 21:04

போனதடவை வீட்டுக்கு 25 கிலோ கோதுமை ஃப்ரீன்னு சப்பாத்தி வாக்குறுதி சுட்டுப் பாத்தாங்க. முடியலை.


அப்பாவி
ஜன 05, 2025 18:35

டில்லிக்கு இப்போ எதுக்கு அவசர அவசரமா திட்டங்களை அறிவிக்கணும்?


Velan Iyengaar
ஜன 05, 2025 18:28

தமிழகத்தில் ஆட்சி பிடிப்போம் என்று சொல்லும் ஆட்டுக்குட்டி பேச்சுக்கும் இந்த பேச்சுக்கும் ஆறு வித்தியாசயம் கண்டுபிடிக்கும் வாசகர்களுக்கு பரிசு நிச்சயம்


சந்திரசேகரன்,கள்ளந்திரி
ஜன 05, 2025 19:14

உன் பரிசைகொண்டு போய் குப்பையில் போடு. நீ முதலில் உன் சொந்த பெயரில் கருத்தை போடு...


Constitutional Goons
ஜன 05, 2025 17:18

பாஜ ஆட்சிக்கு வந்துவிட்டால் கேஜ்ரிவாலும் AAP காரர்களும் பரிசுத்தமானவர்களாகி விடுவார்கள் . அணைத்து வழக்குகளும் வாபஸ் ஆகி விடும்.


ghee
ஜன 05, 2025 18:40

அணில் செந்தில் கதயா கூன் விழுந்த கொத்தடிமை


Barakat Ali
ஜன 05, 2025 19:08

எப்படி ???? 1996 இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல அதிமுக மாஜிக்களுக்கு புனிதர் பட்டம் வழங்கி கட்சியில் சேர்த்தாரே ..... அதைப்போலவா ???? செபா யார் ???? சேகர் பாபு யார் ????


Jay
ஜன 05, 2025 16:15

அங்கு காங்கிரஸ் கட்சி அழிந்துவிட்டது. போட்டி ஆம்ஆத்மிக்கும் பாஜகாவுக்கும்தான். சென்ற தேர்தல் வியுகத்தில் ஆம்ஆத்மி மோடியை விமர்சிக்காமல் தேசிய சிந்தனை உள்ளவர்களை பகைக்காமல் காய்களை கச்சிதமாக நகர்த்தி வெற்றி பெற்றனர். தற்போது கெஜ்ரிவால் மீதுள்ள அதிர்ப்த்தியை மறைக்க அதிஷியை களம் இறக்கி உள்ளனர். அதிக வாய்ப்பு பாஜகாவுக்குதான்.


அப்பாவி
ஜன 05, 2025 14:31

டில்லியில் இன்னும் வளர்வதற்கு என்ன இருக்கு? இப்போ இருக்கிறவங்ககை நிம்மதியா வாழ விடுங்க போதும்.


முக்கிய வீடியோ