உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலக்காட்டில் ரூ.2.36 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

பாலக்காட்டில் ரூ.2.36 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாலக்காடு: கேரளாவில், 2.36 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவின் பாலக்காடு எஸ்.பி., அஜித்குமாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஏ.எஸ்.பி., ராஜேஷ்குமார், இன்ஸ்பெக்டர் விபின்குமார் தலைமையிலான பாலக்காடு டவுன் தெற்கு போலீசார், நேற்று காலை காணிக்கமாதா பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது, எவ்வித ஆவணமும் இன்றி, 2.36 கோடி ரூபாய் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். விசாரணையில், ஆட்டோவில் இருந்தவர்கள் நுாறணி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், 55, ஹரீஸ், 40, ஆகியோர் என்பதும், பாலக்காட்டில் இருந்து ஒற்றைப்பாலத்துக்கு பணத்தை கொண்டு செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், பறிமுதல் செய்த பணத்துடன் தொடர் விசாரணைக்காக, வருமான வரித்துறையினரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி