உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குற்றம் இழைத்துள்ளார்!

குற்றம் இழைத்துள்ளார்!

பீஹார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருப்பதன் வாயிலாக குற்றம் இழைத்துள்ளார். தவறான தகவல்களை அளித்து தேர்தல் கமிஷனையும் ஏமாற்றியுள்ளார். காங்கிரசின் ராகுலும், தேஜஸ்வியும் நாட்டையோ, அரசியல் சாசனத்தையோ காக்க போராடவில்லை; மாறாக, அவர்களின் குடும்பத்தாரை காக்க போராடுகின்றனர். சம்பித் பத்ரா தேசிய செய்தித்தொடர்பாளர், பா.ஜ.,

விவாதம் தேவை!

பீஹாரில் தலித்துகள், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் பெருமளவு நீக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியினர் வலுவாக உள்ள தொகுதிகளை குறிவைத்து தேர்தல் கமிஷன் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தேர்தல் நியாயமாக நடக்கும் என்பதை எப்படி நம்புவது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும். மாணிக்கம் தாகூர் லோக்சபா எம்.பி., காங்கிரஸ்

கேள்விக்குறியாகும் நடுநிலை!

பீஹாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகிறோம். இந்த விவகாரத்தில், அரசு எதையோ மறைக்க முயற்சிக்கிறது. தேர்தல் கமிஷனின் நடுநிலை பற்றிய கேள்விக்குறி மக்களிடையே எழுந்துள்ளது. இதை அறிந்துகொள்வது அவர்களின் உரிமை. அதற்காகவே, விவாதம் நடத்த வேண்டும். கவுரவ் கோகோய் லோக்சபா எம்.பி., காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை