உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவருக்கு கடவுளின் ஆசி இருக்கிறது: மோடிக்கு ஸ்ரீவிஜயேந்திரர் பாராட்டு

அவருக்கு கடவுளின் ஆசி இருக்கிறது: மோடிக்கு ஸ்ரீவிஜயேந்திரர் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாரணாசி : '' பிரதமர் மோடிக்கு கடவுளின் ஆசி இருக்கிறது,'' என காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.வாரணாசி சென்றுள்ள பிரதமர் மோடி, ஆர்.ஜே.சங்கரா கண் மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்த விழாவில், கவர்னர் ஆனந்தி பென் படேல், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது: இதுபோன்ற மருத்துவமனை கோவையில் முதலில் துவக்கப்பட்டது. தற்போது 17வது மருத்துவமனை துவங்கி உள்ளது. ஏற்கனவே, உ.பி.,யின் கான்பூர் மற்றும் வாரணாசியில் இதுபோன்ற மருத்துவமனைகள் உள்ளன. நமக்கு நல்ல தலைவர்கள் கிடைத்து உள்ளனர். சமூகத்தின் ஆளுமையும் முக்கியம். நல்லொழுக்கமுள்ள தலைவர் வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைக்கும் தலைவர் வேண்டும். பிரதமர் மோடியை கடவுள் ஆசிர்வதித்துள்ளார். அவரது அரசு என்டிஏ அரசு(Narendra Damodar Das ka Anushasan (discipline of Narendra Damodar Das).) உலகிலேயே சிறந்த அரசாக இருக்கிறது. அனைவரின் நலனுக்காகவும் மத்திய அரசு சிறந்த பணிகளை செய்து வருகிறது.இவ்வாறு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசினார்.Gallery


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Palaniappan
அக் 22, 2024 12:41

தமிழர்களின் ஆசி வேண்டுமென்றால் மணல் கொள்ளை கஞ்சா விற்பவன் மது விற்பனை மூலம் பல்லாயிரம் கோடி சம்பாதிப்பவன் எல்லா டெண்டர்களிலும் கொள்ளை அடிக்கக் கூடியவன் இப்படிப்பட்டவனுக்கு மட்டும்தான் தமிழர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அவனைத்தான் ஆட்சி கட்டிலில் அமர வைப்பார்கள். தமிழனுக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் ஓட்டு போடும் பொழுது 500 ரூபாய் வாட்டர் மது பிரியாணி மட்டுமே. நன்கு படித்தவன் புத்திசாலி யாரும் ஓட்டு போட மாட்டார்கள். அல்லது வெளிநாட்டுக்கு வேலை செய்யப் போய் விடுவார்கள். இங்கு பாமர மக்களை மட்டும் மூளை சலவை செய்து அவர்களுக்கு இலவசத்தை வாரி வழங்கி ஆட்சி கட்டையில் அமர வைத்து விடுவார்கள். இதுதான் இங்கு நடைமுறை.


venugopal s
அக் 21, 2024 19:20

தமிழர்களின் ஆசி மட்டும் தான் இல்லை, பாவம்!


அப்பாவி
அக் 20, 2024 22:25

ஆனா குமாபுஷேகத்துக்கு கூப்புட்டாலும் போக மாட்டோம்.


Kalyanaraman
அக் 20, 2024 22:22

NDA-வுக்கு புதிய விளக்கம் ????


Duruvesan
அக் 20, 2024 22:16

அய்யயோ விடியலு தூக்கம் வராதே,அய்யண்ணுங்கோ திட்டு வாங்குவாங்கோ, பாவம்


கிஜன்
அக் 20, 2024 21:13

ஹர ஹர சங்கர ...ஜெய ஜெய சங்கர .... காஞ்சி சங்கர ....காமகோடி சங்கர .... என்று ஒரு காலத்தில் இளைய பெரியவா சைக்கிள் ரிக்சா பின்னால் கோஷம் போட்டுக்கிட்டு ஓடிவந்த காலம் ... அப்போதெல்லாம் இரு பெரியவர்களுக்கு பின்னாலும் ஒரு சைக்கிள் ரிக்ஸா வரும் ... அவ்வளவு எளிமை ... ஸ்ரீ.ராம ஜெயம் 1001 தடவை எழுதி காட்டினால் அப்பயணத்தில் ...இளையபெரியவா வின் நேரடி ஆசி கிடைக்கும் ...


Ramesh Sargam
அக் 20, 2024 20:30

ஹர ஹர சங்கர. ஜெய ஜெய சங்கர. சங்கரம் போற்றி. மோடிஜி வாழ்க. வந்தே மாதரம்.


சமீபத்திய செய்தி