உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடஒதுக்கீடுக்கு எதிரானவர்!

இடஒதுக்கீடுக்கு எதிரானவர்!

பேசுவதற்கு எந்த பிரச்னையும் இல்லை என்பதால் எதிர்க்கட்சிகள், அம்பேத்கர் விவகாரத்தை எழுப்புகின்றனர். 'அம்பேத்கர் பெயரை பயன்படுத்துகிறீர்களே, அவரை பின்பற்றுகிறீர்களா' என்று தான் அமித் ஷா கேட்டார். நேருவே இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் தான். ஜிதன் ராம் மாஞ்சி, மத்திய அமைச்சர், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா

தேர்தல் கமிஷனுக்கு பயமா?

தேர்தல் நடவடிக்கை தொடர்பாக சட்டப்பூர்வமாக தேவைப்படும் தகவல்களை தேர்தல் கமிஷன் பொது மக்களுடன் பகிர வேண்டும் என, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்புக்கு இணங்காமல் தேர்தல் கமிஷன் விதியில் திருத்தம் செய்துள்ளது. வெளிப்படைத்தன்மை என்றால் பயமா?ஜெய்ராம் ரமேஷ், ராஜ்யசபா எம்.பி., - காங்கிரஸ்

மாற்றத்தை விரும்பும் டில்லி!

டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் தண்ணீர், மின்சாரம், வடிகால் வசதி போன்ற பிரச்சனைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. டில்லி மக்கள் இனியும், ஆம் ஆத்மியிடம் இருந்து சாக்கு போக்குகளை கேட்க மாட்டார்கள். அவர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். பன்சுரி ஸ்வராஜ், லோக்சபா எம்.பி., - பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி