உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்து மதத்துக்கு எதிராக உறுதிமொழி: சத்தீஸ்கரில் தலைமை ஆசிரியர் கைது

ஹிந்து மதத்துக்கு எதிராக உறுதிமொழி: சத்தீஸ்கரில் தலைமை ஆசிரியர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிலாஸ்பூர்: சத்தீஸ்கரில் ஹிந்து கடவுள்களுக்கு எதிராக கிராம மக்களை உறுதிமொழி எடுக்கச் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டார். சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பராரி கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தலைமை ஆசிரியராக ரத்தலால் சரோவர், 60, பணிபுரிந்து வருகிறார். கடந்த 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்த போது, அங்குள்ள மொஹத்ராய் கிராம மக்களை ஒன்று திரட்டி, சிவன், ராமர், கிருஷ்ணர் உள்ளிட்ட ஹிந்து கடவுள்களுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கச் சொல்லி வலியுறுத்தினார். அதேசமயம், புத்த மதம் குறித்த பிரசாரத்தில் அவர் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து, ரத்தலால் மீது ரூபேஷ் சுக்லா என்பவர் போலீசில் புகார் அளித்தார். அதில், அவரின் செய்கையால் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களின் உணர்வுகள் புண்பட்டுள்ளதால், ரத்தலால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இது தொடர்பான விசாரணையில், ரத்தலால் மீதான குற்றம் உறுதியானதை அடுத்து, அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.அவர் மீது மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு எதிரான செயலில் ஈடுபட்டது உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முன்னதாக, அவர் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ரத்தலால் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தமிழ்
ஜன 30, 2024 12:09

அவனை வெளியவே விடாதீங்க யுவர் ஆனர். வாழ்நாள் முழுக்க களி தின்னாதான் இவனைமாதிரி ஆட்களுக்கு புத்தி வரும்.


T.Senthilsigamani
ஜன 30, 2024 06:50

இவரை போன்ற ஆசாமிகளை மனநோய் காப்பகத்தில் சேர்த்து குணப்படுத்த வேண்டும் .இல்லாவிடில் போலி மதச்சார்பின்மை கூட்டங்கள் சத்தீஸ்கர் மாநிலத்தின் பெரியவராக - பெரியார் செயற்கரிய செய்வார் - என அவரை திருவுரு மாற்றம் செய்து விடுவார்கள்.அப்புறம் ஊருக்கு ஒரு சிலை ,தெருவுக்கு தெருவுக்கு பெயர் ,மாவட்டத்துக்கு ஒரு கல்லூரி பெயர் ,மாநிலத்துக்கு ஒரு பல்கலைக்கழகம் பெயர் என அவரை சமூக விடுதலைக்கு வித்திட்ட மிக மிக பெரியவர் என உல்ட்டா பண்ணி ,உயர்த்தி விடுவார்கள் .பிறகு அவர் பெயரில் நடக்கும் ஊர்வலங்களில் அயோத்தி ராமன் அசிங்கமாக அர்ச்சனை செய்யப்படுவார் .ஆதலால் இப்போதே அவரை மனநல விடுதியில் சேர்த்து விடவும் .இந்தியாவில் ஏற்கனவே ஒரு மாநிலம் இத்தகைய ஒருவரை - வெள்ளையர்களை போகாதே போகாதே என்று கூவி சுதந்திரத்தை வேண்டாம் என்று சொன்னவரை ,உலக பொதுமறையை தங்க தட்டில் வைத்த மலம் என்று நவின்றவரை ,தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று கண்டுபிடித்தவரை ,ஹிந்து கடவுளரை இழிவுகள் செய்தவரை சமூக நீதி காத்த பிதாமகன் என ஜாலங்கள் செய்து மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறது .அத்தகைய கொடுமையான நிலை,கையறு நிலை வேறு எந்த ஒரு மாநிலத்துக்கும் வர வேண்டாம்


Duruvesan
ஜன 30, 2024 04:59

அவரு கண்டி இங்க இருந்தா விடியல் சார் விருது குடுத்து இருப்பார், கேஸ் குடுத்தவரு ஜெயில்ல இருந்து இருப்பாரு


sridhar
ஜன 30, 2024 11:18

மத நல்லிணக்க விருது.


NicoleThomson
ஜன 30, 2024 04:44

இது போன்று கிருஸ்துவ/இசுலாமிய/புத்த(சீனா)பெரும்பான்மை மக்களின் நாட்டில் செய்ய முடியுமா என்று ரத்தலால் யோசித்திருப்பாரா?


Palanisamy Sekar
ஜன 30, 2024 03:15

அவரை வடக்குப்பட்டி ராமசாமி மண்ணுக்கு அழைத்துவந்து விழா எடுக்கப்போறாங்க..வீடும் கட்டிக்கொடுத்து அரசில் உயர் பதவியும் கொடுக்க தயாராக இருக்கின்றார்கள்..உ நிதி உடனே அங்கே சென்று பரபரப்பாக செயல்படப்போகிறார் பொறுத்திருந்து பாருங்களேன்..


Ramesh Sargam
ஜன 30, 2024 00:01

சரியாக உதைக்கவேண்டும் அந்த ஆசிரியரை.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ